இது பிக்பாஸ் வீடா இல்ல..? என்ன பண்ண சொன்னா? என்ன பண்றீங்க.. கோட்டை கழட்டிய விஜய்சேதுபதி.. கடுப்பில் தெறித்த காட்டம்!
Oct 12, 2024, 03:38 PM IST
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் முறை வீக்காக இருப்பதால், வார இறுதி நாளில் வந்திருக்கும் விஜய் சேதுபதி காட்டமாக பேசி இருக்கிறார்.
முதல் எபிசோடில் கோட் சூட் என வந்த விஜய் சேதுபதி, வார இறுதி எபிசோடில் கோட்டை கழற்றிப்போட்டு விட்டு சாதரண ஆடையில் வந்திருக்கிறார். வந்த உடனே காட்டமாக பேச ஆரம்பித்த அவர், போட்டியாளர்கள் கப்புதான் முக்கியம் என்று உள்ளே சென்றார்கள். தற்போது பெட்டுக்கு சண்டைப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கோட்டை போட்டு கேம் விளையாடுங்கள் என்று சொன்னால், நான் உப்புத்தருகிறேன் நீ தண்ணீர் தருகிறாயா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
போதைக்குறைக்கு என்னுடைய நூடூல்ஸை காணோம், கொத்துமல்லிக்கெட்டை திருடி விட்டார்கள் என்றெல்லாம் புகார் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே இவர்கள் கேம் ஆடத்தான் உள்ளே சென்று இருக்கிறீர்களா இல்லை டூர் சென்று இருக்கிறார்களா எனக்குத்தெரியவில்லை; இந்த பஞ்சாயத்து என்ன என்பதை பேசி முடித்து விடுவோம் என்று பேசினார்.
முன்னதாக, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலேயே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டார். பிக்பாஸில் முதன்முறையாக பெண்கள் அணியும், ஆண்கள் அணியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பெண்கள் அணியில் இருந்து அபியும், ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரனும் வீட்டை மாற்றி இருக்கின்றனர்.
வீடு மாறிய போட்டியாளார்கள்
ஆண்கள் அணியில் இந்த தேர்வு மிகவும் சுமூகமாகச் சென்றாலும், பெண்கள் அணியில் அப்படி செல்லவில்லை, தர்ஷா, அபியா, ஜாக்குலின் ஆகியோரில் யார் பெண்கள் அணிசார்பாக ஆண்கள் வீட்டிற்குள் செல்வது தொடர்பான மோதல் பூதகரமாக வெடித்தது. இதில் ஏற்கனவே பெண்கள் அணி தன்னைக் கேட்காமல் ஆண்கள் அணிக்கு கொடுத்த எலிமினேஷன் சலுகையை குறிப்பிட்டு வீட்டிற்குள் செல்லாமல் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கும் ஜாக்குலினை எல்லோரும் சேர்ந்து தாக்க, ஒரு கட்டத்தில் அவர் அழுதே விட்டார்.
பின்னர், அவரை அனைவரும் சமாதானம் செய்தனர். ஆண்கள் அணியில் ரவீந்தரும், ரஞ்சித்தும் சண்டைப்போட்டுக்கொண்டது ஏமாற்று வேலை என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதற்கிடையே, யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக, 24 மணி நேர எலிமினேஷன் என்று கூறி, களமிறங்கிய அடுத்த நாளே சாச்சானா வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்.
என்ட்ரி கொடுத்த சாச்சனா
நேற்று வீட்டில் என்ட்ரி கொடுத்த சாச்சனா பெண்கள் அணியினரை அழைத்து அட்வைஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சாச்சனா ஒரு வீட்டில் 10 பெண்கள் சேர்ந்தால் அங்கு குழாய் அடி சண்டை தான் போடுவார்கள் என்பார்கள். அதை ஏன் இந்த வீட்டில் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்குள் பிரச்சனை என்ன இருந்தாலும் அதை இந்த ரூமில் முடித்துக் கொள்ளுங்கள் எதற்கு ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் வந்து அட்வைஸ் செய்யும் அளவிற்கு வைத்துக் கொள்கிறீர்கள்.
இது பார்க்க கேவலமா இருக்கு
ஜாக்குலின் அக்கா நீங்கள் ஏன் ஜெஃப்ரி வந்து அட்வைஸ் பண்ணும் அளவிற்கு அழுகிறீர்கள். வெளியில் பெண்களிடையே ஒற்றுமை இல்லை என்பது பச்சையாக தெரிகிறது. இது பார்க்க கேவலமா இருக்கு. ஏன் ஒரு போட்டியோ டாஸ்கோ வந்தால் தகுதியான ஆள் யார் என்று யோசிக்காமல் நான் போகிறேன் நீ போகிறேன் என சண்டை போடுகிறீர்கள். அந்த டாஸ்க்கோ போட்டிக்கோ யார் தகுதியானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை அனுப்புங்கள். அதை விட்டுவிட்டு சண்டை போடுவது வீண்.
பெண்கள் ஒன்று சேர்ந்தால் சண்டைதான் நடக்கும்
உங்கள் தனித்துவமான விளையாட்டை காட்ட நீங்கள் விளையாடுவது சரி ஆனால் ஏன் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை. தயவுசெய்து எந்த பிரச்சனை இருந்தாலும் இந்த ரூம்குள்ளே முடித்துக் கொள்ளுங்கள். லிவிங் ஏரியாவிற்கு சென்று அழுவாதீர்கள். வெளியே என்ன தெரியுமா பேசுகிறார்கள் ஆண்கள் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை என பேசுகிறார்கள். எனவே அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். பெண்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். பெண்கள் ஒன்று சேர்ந்தால் சண்டைதான் நடக்கும் என்ற பழமொழியை நாம் மாற்றுவோம்.
முத்துக்குமரனை முழுமையாக நம்ப வேண்டாம்
அதேபோல முத்துக்குமரன் அவர்களுக்காகவும் கேம் விளையாட வில்லை, நமக்காகவும் கேம் விளையாட வில்லை அவர் அவருடைய கேமை தான் விளையாண்டார். ஆனால் அவர் அங்கிருந்து வரும்போது அவர்களுக்காக விளையாட தான் வந்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அவர் அவருக்கான கேமை மட்டுமே விளையாடி இருக்கிறரார். அவரை நம்பி நாம் போட்டிகளில் பங்கேற்க விடலாம். ஆனால் முழுமையாக நம்ப வேண்டாம். அதேபோல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை நான் தனித்தனியாக உங்களிடம் வந்து சொல்கிறேன் என சாச்சனா கூறினார்.
டாபிக்ஸ்