Vijay Sethupathi: ரெமான்ஸ் கம் த்ரில்லர்!விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்பின் மெர்ரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர்
Dec 20, 2023, 08:07 PM IST
விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் உருவாகியுள்ளது. படத்தில் கத்ரீனா கைஃபுடன் ரெமான்ஸ், த்ரில்லரில் கலக்கியுள்ளார் விஜய் சேதுபதி.
கோலிவுட் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரத்தில் தன்னை பொருத்தி கொண்டு சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவராக உள்ளார்.
தனது இமேஜை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் டாப் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் சேதுபதி முதல் முறையாக ஹிந்தியில் நடித்திருக்கும் படம் மெர்ரி கிறிஸ்துமஸ்.
இந்த படத்தை பத்லாபூர், அந்தாதூன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பிரபல பாலிவுட் முன்னணி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். படத்தில் கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துல்ளார்கள்.
சஞ்சய் கபூர், காயத்ரி ஷங்கர், ராதிகா சரத்குமார், பிரதிமா காஸ்மி, சண்முகராஜன் என பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் பலரும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்கள். நடிகை ராதிகா ஆப்தே கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியிருக்கும்
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் இடையிலான ரெமாண்ஸில் தொடங்கும் படத்தின் ட்ரெய்லர் பின்னர் கொலை, துரத்தல் என த்ரில்லர் பாணியான காட்சிகளுடன் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லர் சிறப்பாக இருப்பதாகவும், ஆர்வத்தை தூண்டும் விதமாக இருப்பதாகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ரெமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
முன்னதாக, விஜய் சேதுபதி ஃபார்ஸி என்ற இந்தி வெப் சீரிஸில் நடித்தார். இதைத்தொடர்ந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படம் அவரது முதல் நேரடி பாலிவுட் படமாக திரைக்கு வரவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்