தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tvk Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. முதல் நபராக அவசரமாக சென்ற விஜய்.. காரணம் என்ன?

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. முதல் நபராக அவசரமாக சென்ற விஜய்.. காரணம் என்ன?

Aarthi Balaji HT Tamil

Jun 29, 2024, 07:46 AM IST

google News
TVK Vijay: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக விஜய் அதிகாலையிலேயே திருவான்மியூர் திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார்.
TVK Vijay: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக விஜய் அதிகாலையிலேயே திருவான்மியூர் திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார்.

TVK Vijay: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக விஜய் அதிகாலையிலேயே திருவான்மியூர் திருமண மண்டபத்திற்கு சென்று உள்ளார்.

TVK Vijay: 2026 ஆம் ஆண்டு நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார். இதற்காக அவர் மிகவும் மும்மரமாக தயாராகி வருகிறார்.

10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை அளிப்பட இருப்பதாக கூறி அவர் தரப்பில் இருந்து சமீபத்தில்  தெரிவிக்கப்பட்டது.

முதல் மூன்று இடங்கள்

தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு விஜய், ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார்.

இந்த முறை பொது தேர்வுகளில் அதிக மதிபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. இன்றும் ( ஜூன் 28) , ஜூலை 3 ஆம் தேதியும் இந்த விழா நடக்க உள்ளது. 

தனியார் மண்டபத்தில் விழா

அதன் படி, முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ( ஜூன் 28) நடைபெறுகிறது.

5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர். மாணவர்கள் வரும் போது பேனா, செல்போன், புத்தகம் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் மாணவர்களுடன் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு யாரும் வர அனுமதி இந்த முறை கொடுக்கப்படவில்லை. 

10, 12 வகுப்பில் சாதனை படைத்த ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் விஜய், பொன்னாடை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழ் கொடுக்க உள்ளார். அத்துடன் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.

அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த விஜய்

இந்நிலையில் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் விஜய் அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்தடைந்தார். கடந்த முறை ஏற்பட்ட சிக்கல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அதிகாலையே வந்து உள்ளார்.

மாணவர்களிடையே  விஜய் 10 நிமிடம் உரையாற்றுவார் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் சந்திப்பு விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்னார். 

ஆனால் இந்த முறை அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பில் விஜய் என்ன பேச போகிறார் என தெரிந்து கொள்ள அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி