Vijay Antony: ‘அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’ விஜய் ஆண்டனி உருக்கமான அறிக்கை!
Sep 21, 2023, 08:29 PM IST
‘என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்’
தன் மகள் தற்கொலை தொடர்பாக, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
அன்பு நெஞ்ஜங்களே,
என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள்
விஜய் ஆண்டணி,’’
என்று அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள், ப்ளஸ்2 படித்து வந்த அவர், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலை தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோலிவுட் வட்டாரத்தில், இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் விஜய் ஆண்டனியை சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். சமீபத்தில் பேசும் பொருளாக இருந்த விஜய் ஆண்டனிக்கு, இது போன்ற சூழல் உருவானது, பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இன்னும் சிலர், மரணம் தொடர்பான சந்தேகத்தையெல்லாம் எழுப்பியிருந்தனர். அனைத்திற்கும் சோகத்தோடு அமைதி காத்த விஜய் ஆண்டனி, தன்னுடைய மகளின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, வீடு திரும்பினார்.
மகள் இறந்த அதிர்ச்சியில் இருந்து மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிய அவர், சற்று முன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் உருக்கமான இந்த கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்