தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vignesh Sivan: ‘நீ என்னை மாற்றுகிறாய்’ - மனைவி குறித்து விக்னேஷ் சிவன்

Vignesh Sivan: ‘நீ என்னை மாற்றுகிறாய்’ - மனைவி குறித்து விக்னேஷ் சிவன்

Aarthi V HT Tamil

Sep 23, 2022, 01:22 PM IST

google News
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி குறித்து வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி குறித்து வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி குறித்து வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 18 ஆம் தேதி தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இருவரும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின் முன் நின்று கொண்டு, கேக் வெட்டி பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றை  இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், “உன்னுடன் நான் கொண்டாடும் 8 ஆவது பிறந்தநாள் இது தங்கமே. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் நீ மிகவும் அழகாக மாற்றி வருகிறார். எனக்கு எது கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உனக்கு தெரியும்.  நீ என்னை மாற்றுகிறாய்.

இந்த பிறந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாளாக அமைந்தது. என்னுடைய காதலியாக இருப்பதற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் நம்முடைய காதல் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாகும் இருக்கும் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் நேரம்  கிடைக்கும் போது எல்லாம் வெளியே நாடுகளுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து உள்ளனர். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி