Viduthalai 2: வேட்டி சட்டையோடு வந்த வெற்றி; நிற்காமல் சென்ற கைத்தட்டல்- ‘விடுதலை’ படம் குறித்து சூரி நெகிழ்ச்சி!
Feb 01, 2024, 03:57 PM IST
நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விடுதலை' பாகம் 1. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்ட இந்தப்படம், உலகளவில் கவனம் பெற்று பாராட்டுகளையும் குவித்தது. அந்த வகையில், இந்தப்படம் நேற்று தொடங்கிய நெதர்லாந்து ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றது. இந்த திரையிடலில் விடுதலை பாகம் ஒன்றோடு, பாகம் 2 ம் ஒளிப்பரப்பப்பட்டது.
படத்தை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி தங்களுடைய பாராட்டுகளை படக்குழுவுக்கு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து நடிகர் சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், “நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது... ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தென்றல் ரகுநாதன் ஆடைகள் இன்றி நிர்வாணமாக நடிக்கும் காட்சி ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப்படத்தில் பெண்கள், ஆண்கள் என பலரையும் போலீசார் நிர்வாணமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்வது தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த வகையில் நடிகையுமான தென்றல் ரகுநாதன் இந்தப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். அது குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே!
இது குறித்துப் பேசிய அவர், செங்கல்பட்டு பகுதியில் இயக்குநர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் இருந்தார். ஒரு நாள் இரவு ஏழு மணி அளவில் அவரை சந்தித்துப் பேசினேன். சரி வந்து விடுங்கள் என்று சொன்னார். வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
இந்த படத்தில் முதலில் நடிக்கும் பொழுது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியவில்லை. இயக்குநர் வெற்றிமாறன் படம் என்பதால் இதுகுறித்து கேட்க எனக்குத் தோன்றவில்லை. படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் எனக் கூறினார்கள்.
அப்படி நடிக்கும்போது எனக்குப் பயமோ, தயக்கமோ ஏற்படவில்லை. நான் அங்குப் பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்ந்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் படப்பிடிப்பில் நான் ஆடைகள் என்று நிர்வாணமாக நடிக்கவில்லை. சிஜியில் எடிட் செய்து தான் அது போல் திரையில் காட்டப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளேன் என்பது எனக்குத் தெரிய வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்