தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிறந்தது ஆந்திரா! வாழ்ந்தது தமிழ்ப்பெண்ணாகவே! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சாவித்ரியின் பிறந்தநாள் இன்று!

பிறந்தது ஆந்திரா! வாழ்ந்தது தமிழ்ப்பெண்ணாகவே! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சாவித்ரியின் பிறந்தநாள் இன்று!

Suguna Devi P HT Tamil

Dec 06, 2024, 06:00 AM IST

google News
ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் தான், மறைந்த தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்ரி ஆவார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்க்கை பயணம் குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் தான், மறைந்த தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்ரி ஆவார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்க்கை பயணம் குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.

ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் தான், மறைந்த தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்ரி ஆவார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்க்கை பயணம் குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.

கடந்த சில ஆண்டுகளாக உண்மையாகவே வாழ்ந்து மறைந்த பெரிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சினிமாத்துறையில் சாதித்த மாபெரும் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் பல ஆண்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது உண்டு. வெகு சில பெண்களின் வாழ்க்கையை மட்டுமே பயோபிக் படங்களாக உருவாகியுள்ளது. இந்த வரிசையில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் தான், மறைந்த தமிழின் பழம்பெரும் நடிகை சாவித்ரி ஆவார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்க்கை பயணம் குறித்த சில தகவல்களை இங்கு காண்போம். 

பிறந்தது ஆந்திரா! ஆனால் தமிழ்ப்பெண் தான்!

ஆந்திர மாநிலத்தின் சிராவூர் எனும் கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் சசிகலாவாணி என்பதாகும். இளம் வயதிலேயே நாட்டியம், நாடகம் என பல்துறையிலும் திறமை மிக்கவராக திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து சினிமா வாய்ப்பிற்காக சென்னை வந்து அழைந்தார். பின்னர் முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தமிழ்ப்படங்களில் நடித்தார். 

இவர் பிறந்தது ஆந்திராவாக இருந்தாலும், ஒரு பக்கா தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். இவரைத் திரையில் பார்த்த தமிழ் ரசிகர்கள் அவரை தங்கள் வீட்டில் ஓர் பெண்ணாகவே பார்த்து வந்தனர். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் உச்ச நடிகையாக திகழ்ந்து வந்தார். இந்த அனைத்து மொழியின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். 

ஜெமினியுடன் காதல் 

முதன்முதலாக சினிமா வாய்ப்பு தேடி ஜெமினி ஸ்டுடியோவிற்கு சென்றபோது வாய்ப்பு தர முடியாது என ஜெமினி கணேசன் அவமானப்படுத்தி அனுப்பியதாக ஒரு செய்தி உலா வருகிறது. பின்நாளில் இவரே சாவித்திரியை திருமணம் செய்து கொண்டதும் மிகப் பெரிய ஆச்சரியமாகவே இருந்து வந்தது. தனது 12 வது வயதில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த சாவித்திரி 32 வது வயதில் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 ஆனால் ஜெமினி கணேசன் தனது முதல் திருமணத்தை மறைத்து சாவித்திரியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜெமினி கணேசன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக திருப்தி அடைந்த சாவித்திரி அந்த உறவில் இருந்து பிரிந்து வந்து பின்னாளில் குடிக்கு அடிமையாகி தனது வாழ்வை இழந்து விட்டார்.

பல அவதாரங்கள்

நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகியாகவும் பல பரிமாணங்களில் சாவித்திரி ஜொலித்துள்ளார்.  சாவித்திரி அவரது பெயரிலேயே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சில படங்களை தயாரித்து வந்தார். முதன் முதலாக மதுசூதன ராவ் தயாரித்த ஒரு படத்தில் இயக்குனராக அறிமுகமானார். படத்தின் பெயர் சின்மரி பப்லு. இந்த படத்தை மிகவும் தேர்ந்த இயக்குனராக இயக்கி முடித்திருந்தார். இந்த படம் வெளியான பொழுது ஆந்திரா முழுவதும் படம் அதிக வசூலை பெற்றதாக கூறப்படுகின்றது.

 மேலும் ஆந்திரா அரசு சார்பில் திரைத்துறை துறையினருக்காக வழங்கப்படும் வெள்ளி நந்தி விருதை அப்பளம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின்னரே நடிகை சாவித்திரி தயாரிப்பு துறையிலும் இறங்கினார். இருப்பினும் தயாரிப்பு துறை அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. பல படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன்பின் தயாரிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்தார். தமிழில் சிவாஜி நடித்திருந்த நவராத்திரி படத்தை படத்தின் உரிமையை வாங்கி தெலுங்கில் நாகேஸ்வர ராவ், ஜமுனா ஆகியோரை வைத்து நவராத்திரி படத்தை எடுத்து முடித்திருந்தார். இந்த படமும் தெலுகில் வசூலை குவித்து இருந்தது. இதனை அடுத்து தன் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தை உள்ளம் அஞ்சால் உள்ளிட பல படங்களை தயாரித்து வந்த தயாரித்து வெளியிட்டார்.

துயரமான இறுதி காலம்

அதன் பிறகு வறுமையும் மது பழக்கமும் அவரை சூழ்ந்து கொண்டது. வறுமையின் காரணமாக சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக குடிகாரியாக நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்தது.

குடிப்பழக்கத்தால் உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். சாவித்திரி 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தன்னுடைய 45 ஆவது வயதில் சென்னை லேடி வெலிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆயிரத்தில் ஒருத்தியாக வாழ்ந்த நடிகையர் திலகத்தின் இறுதி நாட்கள் பெரும் துயரம் தரும் முடிவாக இருந்தது. இருப்பினும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவரது பிறந்தநாளான இன்று இவரை நினைவு கூர்வோம். 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி