தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Urvashi: மலையாள சினிமா மோசமா? என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி.. இரவுல கதவை தட்டுவாங்க..’ - ஓப்பனாக பேசிய ஊர்வசி!

Urvashi: மலையாள சினிமா மோசமா? என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி.. இரவுல கதவை தட்டுவாங்க..’ - ஓப்பனாக பேசிய ஊர்வசி!

Aug 28, 2024, 07:20 AM IST

google News
Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” - ஊர்வசி!
Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” - ஊர்வசி!

Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” - ஊர்வசி!

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை மலையாளத்தில் பூகம்பத்தை கிளப்ப, நடிகை ஸ்ரீலேகா மித்திரா, சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து மலையாள நடிகை ஒருவர் ( ரேவதி சம்பத் என்று சொல்லப்படுகிறது) கேரள நடிகர் சங்கமான மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். இதனையடுத்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சங்க தலைவர் மோகன்லாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நடிகை ஊர்வசி சன் நியூஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது

இது குறித்து அவர் பேசும் போது, “கேரளாவில் நடக்கக்கூடிய பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவு தான். இது மலையாள சினிமா மட்டும் அல்ல. ஆணோ, பெண்ணோ சேர்ந்து இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. நாம் செல்லக்கூடிய பேருந்திலோ அல்லது ட்ரெயினிலோ இது போன்ற விஷயங்கள் நடக்கவில்லையா.. என்ன?  கோலிவுட்டில் இது போன்ற விஷயங்களை யாரும் முன்வந்து சொல்லவில்லை. 

இந்த குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு மலையாள சினிமாவை மோசமானது என்று மட்டும் சொல்லாதீர்கள். நானெல்லாம் எப்படியாவது நடித்தால் போதும் என்றெல்லாம் நடிக்கவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை தமிழில் இருந்து தான் தொடங்கியது. எனக்கு என்னுடைய குடும்பம் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. எனக்கு பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் வரவில்லை என்று என்று சொல்லவில்லை. ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய குடும்பம் என் பக்கம் இருந்தது. பெண்களுக்கு பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் மட்டும் நடக்கவில்லை. 

அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? 

அந்த அறிக்கையில்,  சொல்லப்பட்ட ஊதியம் ஒழுங்காக வழங்கப்படவில்லை. படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால் பெண்கள் தனியாக செல்லும் போது, தன்னுடன் ஒரு ஆணை கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால், பொது இடத்தில் வேலை சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துங்கள். சினிமா என்பது மிகவும் பாதுகாப்பான இடம். எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான டெக்னீசியன்கள் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி யாரும் உங்களை அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாது” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி