தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajkiran: இஸ்லாம் மதம் குறித்த சர்ச்சைப்பேச்சு? “கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் விளைவு மோசமாக இருக்கும்” - ராஜ்கிரண்!

Rajkiran: இஸ்லாம் மதம் குறித்த சர்ச்சைப்பேச்சு? “கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் விளைவு மோசமாக இருக்கும்” - ராஜ்கிரண்!

Aug 01, 2023, 02:13 PM IST

google News
பிரபல நடிகரான ராஜ்கிரண் காட்டமான பதில் ஒன்றை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல நடிகரான ராஜ்கிரண் காட்டமான பதில் ஒன்றை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பிரபல நடிகரான ராஜ்கிரண் காட்டமான பதில் ஒன்றை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படுபவர் ராஜ்கிரண். ராமராஜன் நடித்த படங்களைத் தயாரித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஜ்கிரண் 1993ம் வெளியான அரண்மனைகிளி படத்தை இயக்கி தன்னை இயக்குநராகவும் நிரூபித்தார். பிறப்பில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ராஜ்கிரணின் இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது இஸ்லாம் மதம் குறித்தும், பாசிட்டிவான விஷயங்கள் குறித்தும் பதிவுகள் பதிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அவர் தற்போதும் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ ”இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,

அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,

தங்களால் முடிந்த உதவிகளை

பிற சமுதாயத்தினருக்கும்

செய்து கொண்டு, அமைதியாக

வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,

இயலாமையோ, கோழைத்தனமோ,

அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…

“இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”,

பொறுமை காக்க வேண்டும் என்று,

இறைவனின் இறுதி தூதுவர்,

இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும்

பின்பற்றுவதால்,

பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்…

இந்தப்பொறுமையை,

தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட

கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,

அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “ இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்கள் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 

கிறிஸ்துவர்கள் தேவாலயத்திற்குச் சென்று பாடிவிட்டு இறுதியில் நாட்டை யார் யாருக்கோ கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியதே.. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் அவர்கள்தான்.” என்று பேசினார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராஜ்கிரண் இவ்வாறான பதிவை வெளியிட்டு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி