தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha Vijaykumar: 'நிறுத்துங்க.. பீட்டர் பால் என் கணவரே இல்ல' - பகீர் கிளப்பிய வனிதா

Vanitha Vijaykumar: 'நிறுத்துங்க.. பீட்டர் பால் என் கணவரே இல்ல' - பகீர் கிளப்பிய வனிதா

Aarthi V HT Tamil

May 02, 2023, 03:32 PM IST

google News
தன் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை வனிதா விஜயகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.
தன் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை வனிதா விஜயகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.

தன் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை வனிதா விஜயகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பால் உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். டந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்கள் அதே ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இருவரும் பிரிந்த பிறகும் பீட்டல் பாலை, வனிதாவின் கணவர் எனக் குறிப்பிட்டு செய்திகள் வெளியாகியது. இதனால் கடுப்பாகி பீட்டர் பால் தன் கணவர் இல்லை என கூறி வனிதா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், " சரி ரொம்ப பொறுமையா யோசிச்சு ரியாக்ட் பண்ணலாமா வேண்டாமா பார்த்தேன்.

எல்லா மீடியா, பத்திரிக்கை & நியூஸ் சேனல்களையும் ஞாபகப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. நான் மறைந்த பீட்டர் பாலை ஒருபோதும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை.

2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்தது. நான் அவருடைய மனைவி அல்ல. அவர் என் கணவர் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் மிகவும் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை, எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை.

நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். ஒருமுறை மக்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறதோ அதைச் செய்யவும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

முன்னதாக அவர் மறைவு குறித்து பதிவு வெளியிட்ட வனிதா, “என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.

நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்க இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி