தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha Vijayakumar: வாடி.. போடி.. அக்‌ஷயா மீது கை வைத்த விஷ்ணு.. ‘ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க’ - வனிதா!

Vanitha Vijayakumar: வாடி.. போடி.. அக்‌ஷயா மீது கை வைத்த விஷ்ணு.. ‘ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க’ - வனிதா!

Oct 25, 2023, 11:04 AM IST

google News
விஷ்ணுவை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.
விஷ்ணுவை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.

விஷ்ணுவை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பேட்டரி டாஸ்க்கில் போன் போடை தூக்கி ஓடிச்சென்ற போது, அக்‌ஷயா தன்னை தள்ளிவிட்டதாக கூறி, விஷ்ணு அக்‌ஷயாவிடம் சாடினார். தொடர்ந்து வாடி.. போடி.. என்று பேசிய அவர், ஒருக்கட்டத்தில் அவரது அடிக்கவும் செய்துவிட்டார்.

இதனை விக்ரமும், நிக்சனும் தட்டிக்கேட்க இருவரிடமும் சண்டைக்கு சென்றார் விஷ்ணு. பின்னர் அனைவரும் அவரை கண்டிக்க, அக்‌ஷயாவிடம் மன்னிப்பு கேட்டார் . இது நேற்று பிக்பாஸ் எபிசோடை பரபரப்பாக்கியது. இந்த நிலையில் இது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசினார். அவர் பேசும் போது, “ நேற்றைய நிகழ்ச்சியில் விஷ்ணு செய்ததை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விஷ்ணு மிக மிக வன்முறையாக நடந்து கொண்டார்.

கத்துவது, தேவையில்லாத வார்த்தைகளை விடுவது என அனைத்துமே அவரிடம் மிக மிக வைலண்டாக இருக்கிறது. அக்‌ஷயா மீது கை வைத்தது அவர் செய்த மிகப்பெரிய தவறு. அநியாயத்திற்கு விஷ்ணு துள்ளுகிறான். வாடி போடி என்றெல்லாம் பேசுகிறான்.

 

பூர்ணிமா நிக்சனிடம் சென்று அவனும் நீயும் ஒன்றா என்று கேட்டு நிக்சனை அடக்கம் முயன்றாள். அதற்கு காரணம் என்னவென்றால், விஷ்ணு மட்டமானவன், கேவலமானவன் அவனை போன்று நீயும் செய்யப் போகிறாயா என்ற கோணத்தில் செய்யப்பட்டது.

அவன் மற்றவரிடம் மரியாதை எதிர்பார்க்கிறான். மரியாதை கொடுக்கவில்லை என்றால், அவர்களிடம் சண்டைக்கு நிற்கிறான் ஆனால், இவன் மட்டும் மரியாதையாக நடந்து கொள்ள மாட்டானா..?

கமல் சார் விஷ்ணுவுக்கு கண்டிப்பாக ஒரு ஸ்டிரைக் கார்டு கொடுத்தே ஆக வேண்டும். என்னை கேட்டால் விஷ்ணுவுக்கு ரெட்கார்டு கொடுத்து அவனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவன் தொல்லை தாங்கவே முடியவில்லை.. ஜோவிகாவிடம் இவன் டா போட்டு பேசியதற்காக, சண்டைக்கு நின்றான். அப்படியிருக்க இவன் மட்டும் எந்த உரிமையில் அக்சயாவை டி என்று போட்டு பேசினான்” என்று பேசினார்.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி