Vanitha Vijayakumar: ‘ஆங்கில வழி கல்வியில மரியாதையே கிடையாது.. ஜோவிகாவிற்கு மெச்சூரிட்டி இல்லையா’ - வெளுத்த வனிதா!
Nov 05, 2023, 06:30 AM IST
ஜோவிகா மரியாதை குறைவாக பேசுவதாக பேசப்படும் நிலையில் அது குறித்து வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, “அந்த வாய்ப்பு அவளுக்கு உடனடியாக கிடைக்கவில்லை டிஸ்னியின் தலைவரே ஜோதிகாவிடம் நேரடியாக வந்து பேசினார். இறுதியில் ஜோவிகாவை பார்த்து, இது உண்மையாக இருக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட ஜோவிகா வெளியே வந்து என்னிடம் இதைச் சொன்னாள். காரணம் என்னவென்றால், இந்த 18 வயதில் அவளுக்கு இந்த அளவுக்கான மெச்சூரிட்டி என்பது இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.
இப்படித்தான் இவரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் கிடையாது. உள்ளே எல்லோரும் மச்சான், மாமா, நண்பன் என்று பேசிக் கொள்கிறார்கள். அதில் இருக்கக்கூடிய ஒரே பிரச்சினை என்னவென்றால், அதில் அப்படி அழைக்கும் பொழுது அது யாருக்கு பிரச்சினையாக இருக்கிறது என்பதுதான். ஜோவிகாவை பொருத்தவரை அவள் சகஜமாக பழகுகிறாள். வயது வித்தியாசம் பார்த்து அவள் பழகவில்லை.
பிக் பாஸ் தொடங்கி தற்போது நான்கு வாரங்கள் ஆகிவிட்டது இப்போது ஜோவிகா மீது எல்லோருக்கும் ஒரு விதமான பற்று வந்திருக்கிறது. முதலில் இந்த பிரச்சினையில் முட்டிக்கொண்ட விஷ்ணு, தற்போது ஜோவிகாவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு வாரத்தில் எந்த ஒரு உறவையும் எடை போட முடியாது வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அது வேறு மாதிரியாக தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு அது வேறு மாதிரியான உணர்வை கொடுக்கும்.
ஆங்கில கல்வியில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது கிடையவே கிடையாது. ஆங்கில கல்வி வழியில் அவள் முழுக்க முழுக்க படித்த காரணத்தால், அவள் அப்படியே பழகிவிட்டாள்.
பெரியவர்களை மரியாதையாக தான் பேசுவாள். ஆனால் நண்பர்களுக்குள் பேசும் பொழுது ஆங்கிலத்தில் பேசிவிட்டு, தமிழில் பேசி கொண்டு சூழ்நிலை ஏற்படும் போது வாடா போடா என்று தான் அவள் பேசுவாள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்