தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: அதிரும் கேரளா.. ரியாஸ்கான் பாலியல் புகார் டூ வாழை வசூல் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema: அதிரும் கேரளா.. ரியாஸ்கான் பாலியல் புகார் டூ வாழை வசூல் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

Aug 25, 2024, 06:54 PM IST

google News
Top 10 Cinema: ரியாஸ் கான் புகார் முதல் வாழை விருந்து வரை என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
Top 10 Cinema: ரியாஸ் கான் புகார் முதல் வாழை விருந்து வரை என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top 10 Cinema: ரியாஸ் கான் புகார் முதல் வாழை விருந்து வரை என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

  1. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. அவரின் சிறுவயதில் சந்தித்த அனுபவங்களின் கதையை இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வடிவமைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம் தற்போது சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.  பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த இந்தப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. ஆக மொத்தமாக இரண்டாவது நாளில் வாழை திரைப்படம் 3.65 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகளவி இந்தப்படம் 4.30 ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
  2. நடிகை நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' என்று கூறியதாக, பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

ரியாஸ் கான்

3. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

சித்திக் ராஜினாமா

4. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை பார்த்த சென்சார் குழு, படத்தில் சில இடங்களில் மியூட்டை பயன்படுத்த பரிந்துரைத்ததாகவும், மிகவும் ஆக்ரோஷமான சீன்களை ட்ரிம் செய்யுமாறும் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இறுதியில் தோராயமாக 3 மணி நேரம் ஓடும் படத்தில் 5 செகண்ட் அளவிலான காட்சியை படக்குழு ட்ரிம் செய்திருக்கிறது. வெங்கட் பிரபு படத்தில் வழக்கம் போல இடம் பெறும் பிளாப்பரும் இதில் அடங்கும்.

நடிகர் விஜய்

 

5. நடிகர் விஜய்சேதுபதிக்கு அறிமுகமே தேவையில்லை. அவரது நடிப்பில், அண்மையில் வெளியான திரைப்படம் மகாராஜா விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய் சேதுபதி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து இருந்தார்.அதில் அவருக்கு பெரிய பேர் கிடைத்தது. இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தை மேலும் ஒரு பாகமாக பிரித்து 3 பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

6. மறைந்த நடிகர் விஜய்காந்தின் 72 வது நாளை பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட பதிவில் “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

7. நடிகர் வாழை படத்தினை பார்த்த விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அந்தப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டும் வகையில் அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்தினார்.

8.கேரள நடிகர் சங்கமான மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் பதவியை மூத்த மலையாள நடிகர் சித்திக் ராஜினாமாசெய்துள்ளார். முக்கியமாக மலையாளத்தில் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சித்திக், ஏசியாநெட் டிவிக்கு தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

“எனது ராஜினாமா கடிதத்தை AMMA மோகன்லாலிடம் தெரிவித்துள்ளேன். என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். அந்தப் பதவியில் தொடர்வது எனக்கு உகந்ததல்ல. குற்றச்சாட்டுகள் குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை" என்றார்.

9. தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த மேகா ஆகாஷ், தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இவருக்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

10. டிமான்டி காலனி - 2  திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி