தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ttf Vasan Marriage: டிடிஎஃப் வாசனுக்கு, பிரபல நடிகையுடன் திருமணம்?

TTF Vasan Marriage: டிடிஎஃப் வாசனுக்கு, பிரபல நடிகையுடன் திருமணம்?

Aarthi V HT Tamil

Jul 08, 2023, 01:52 PM IST

google News
டிடிஎஃப் வாசனுக்கு, பிரபல நடிகையுடன் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
டிடிஎஃப் வாசனுக்கு, பிரபல நடிகையுடன் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

டிடிஎஃப் வாசனுக்கு, பிரபல நடிகையுடன் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக மாற்றி ட்வின் த்ரோட்லர்ஸ் எனும் தன்னுடைய யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன். இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இதையடுத்து, இணையத்தில் டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.

அப்போதில் இருந்து டிடிஎஃப் வாசன் மீது ஒன்றன் பின் ஒன்றான புகார் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவர் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கிய நிலையில் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் மருமகளாக நடித்த சங்கீதாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

சங்கீதா

சங்கீதா அவரின் அண்ணன் அனைவருக்கும் பைக் ட்ராவால் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இவர்கள் அடிக்கடி டிடிஎஃப் வாசனை சந்திப்பர்கள். சங்கீதா கூட அடிக்கடி டிடிஎஃப் வாசன் உடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வார்.

இந்நிலையில் தற்போது சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில், திருமண அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் மணமகள் இடத்தில் இவர் பெயரும் மணமகன் இடத்தில் வெறும் V என்று மட்டும் இருக்கிறது. அதனால் அந்த பெயர் கண்டிப்பாக டிடிஎஃப் வாசனாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்து உள்ளனர். திருமண நாள் ஆகஸ்ட் 20 என குறிப்பிடப்பட்டு உள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பை டிடிஎஃப் வாசன் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி