உணர்வுகளை கடத்த தெரிந்த கலைஞர்.. அழியா புகழ் கொண்ட திருச்சி லோகநாதன்
Nov 17, 2023, 05:00 AM IST
Trichy Loganathan Memorial Day: திருச்சி லோகநாதனின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மனித குரலுக்கு என்றுமே ஒரு தனித்துவம் உண்டு. இசையும் நாடகமும் சேர்வதற்கு முன்பு குரல் மூலம் எத்தனையோ செய்திகள் கடத்தப்பட்டு மக்கள் மத்தியில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எளிதாக மக்கள் மத்தியில் ஊடுருவிச் செல்வதற்காகவே ஒரு குரலில் இசை சேர்க்கப்பட்டது. அதனையும் எளிதாக்கத்தான் நாடகம் சேர்ந்தது.
என் இசை நாடகம் இது மூன்றும் சேர்ந்து மிகப்பெரிய உருவாக்கியது அதுதான் சினிமா. தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை தத்துவத்தின் வெளிப்பாடானது பாடல்களில் இருந்து வருகிறது. அதனை ஒரு சில குரல்கள் தான் செவியின் வழியே சென்று மூளையில் பதித்துச் செல்லும்.
அப்படி ஒரு நயமான கருவியை கொண்டவர் தான் திருச்சி லோகநாதன். தத்துவங்களை உரக்கச் சொல்லி மனிதர் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரிய குரல் சகாப்தம் தான் இந்த திருச்சி லோகநாதன். தற்காலிக ரசிகர்களுக்கு குரல் எந்த அளவிற்கு பிடிக்கும் என தெரியாது.
திருச்சி லோகநாதன் பின்னணி பாடகராக களம் இறங்கிய காலத்தில் ஒரு வசீகரத்தை தனது குரலில் வைத்திருந்தார். தந்தையின் தொழிலின் மீது ஆர்வம் இல்லாமல் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் தன்னை சிறுவயதிலிருந்து செதுக்கி கொண்டார் லோகநாதன்.
இசையமைப்பாளர் ஜி ராமநாதனின் இசையின் மீது ஆர்வம் கொண்டு தனது கலையை வளர்த்துக் கொண்டார் லோகநாதன், விதியின் செயல் இங்கு தான் விளையாடுகிறது. யாரை குருநாதராக ஏற்றுக் கொண்டு இசையின் மீது ஆர்வம் கொண்டாரோ அந்த ஜி.ராமநாதனின் இசையில் தனது முதல் பாடலை பாடினார் லோகநாதன்.
வாராய் நீ வாராய் என்ற பாடலை திரையரங்குகளில் கண்ட மக்கள், இந்த பாடலுக்காகவே ஓடிவந்து இந்த திரைப்படத்தை பார்த்தார்கள் என கூறப்படுகிறது. ஒவ்வொரு உணர்வுகளுக்கும் தனித்துவமான குரல்களை பல பாடகர்கள் கொண்டிருந்தாலும் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய திறனை இவரது குரலில் வைத்திருந்தார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது தனித்துவமான குரல் கொண்டு இவரது பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அந்த அளவிற்கு இசையமைப்பாளர்கள் காத்திருந்து இவரை பதிவு செய்து கொள்ளும் அளவிற்கு உச்சகட்டத்தில் வளர்ந்தார்.
ஒரு பாடலுக்காக மிகப்பெரிய தொகையை அந்த காலத்திலேயே சம்பளமாக வாங்கியவர் இவர். இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாமல் தவறிய எத்தனையோ தயாரிப்பாளர்கள் உள்ளனர். வேண்டுமென்றால் மதுரையைச் சேர்ந்த ஒரு சிறுவன் வந்திருக்கிறான் அவரை வைத்து பாடி கொள்ளுங்கள். என திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய ஒருவர் தான் டி.எம்.சௌந்தரராஜன். அதற்குப் பிறகு டி.எம்.எஸ் ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை உருவாக்கினார் என்பது வேறு விஷயம்.
எந்த உணர்வுகளையும் எந்த சூழ்நிலையிலும் கடத்த தெரிந்த ஒரு சில கலைஞர்களில் விசித்திரமானவர் திருச்சி லோகநாதன். இசையின் சகாப்தமாக வாழ்ந்து வரும் திருச்சலோகநாதனின் முப்பத்தி நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அப்படி உடல் அழிந்தாலும் இசையின் மூலம் இன்று வரை திருச்சி லோகநாதன் வாழ்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்