தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Benny Dayal : இளைஞர்களின் மனம் கவர்ந்த பாப் இசை மன்னர் பென்னி தயாள் பிறந்த தினம் இன்று!

HBD Benny Dayal : இளைஞர்களின் மனம் கவர்ந்த பாப் இசை மன்னர் பென்னி தயாள் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil

May 13, 2023, 06:40 AM IST

google News
HBD Benny Dayal : இளைஞர்களின் மனம் கவர்ந்த பாப் இசை மன்னர் பென்னி தயாள் பிறந்த தினத்தில் அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
HBD Benny Dayal : இளைஞர்களின் மனம் கவர்ந்த பாப் இசை மன்னர் பென்னி தயாள் பிறந்த தினத்தில் அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

HBD Benny Dayal : இளைஞர்களின் மனம் கவர்ந்த பாப் இசை மன்னர் பென்னி தயாள் பிறந்த தினத்தில் அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

பென்னி தயாள், பின்னணி பாடகர். தமிது, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட இந்தியாவின் 19க்கும் மேற்பட்ட மொழிகளில், 3,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவர் எஸ் 5 என்ற இசைக்குழுவின் உறுப்பினர். இந்த இசைக்குழுவை எஸ்.எஸ்.மியூசிக் என்ற சேனல் துவக்கியது. மேற்கத்திய பாணியிலான பாப் இசைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். 1984ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி பிறந்தவர்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தி தொடர்பியல் படித்து வந்த காலத்தில் உருவான அந்த இசைக்குழுவில் இணைந்து அவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

இவரை திரையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தினார். துபாயில் பள்ளிக்கல்வியை முடித்தவர். பல்லே லக்கா பல்லே லக்கா..., டாக்சி... டாக்சி.., ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவையாகும். இவர் துபாயில் பள்ளிக்கல்வியை முடித்தவர். நடனத்திலும் நாட்டம் கொண்டவர்.

இவர் கேராளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நடிப்பிலும் நாட்டம் கொண்ட பென்னி தயாள் பை த பீப்பிள் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்த இவர் தனக்கு விருப்பமான இசைத்துறையில் தொடர்ந்து செயல்படுவதற்காக அந்த வேலையை விட்டார். இவரது மனைவி கேத்தரின் ஒரு மாடல் அழகி ஆவார்.

விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வருவார். அவர் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று ஹெச்.டி.தமிழ் வாழ்த்துகிறது. 

இவர் இசை, இது பிரேமமோ, இது பிரேமமோ 2, சாரல், சுவாசம், வாழ்க்கை ஆகிய இசை ஆல்பங்களை தயாரித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி