தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் - சினிமா ( மே - 12 )

இன்றைய ட்ரெண்டிங் செய்திகள் - சினிமா ( மே - 12 )

Aarthi V HT Tamil

May 12, 2022, 04:56 PM IST

google News
கோலிவுட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..
கோலிவுட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..

கோலிவுட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ..

விக்ரம் படத்தில் இருந்து நேற்று ( மே 11 ) வெளியான பத்தல பத்தல பாடல், யூ-டியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து உள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து இருக்கும், ஐங்கரன் திரைப்படம் வரும் இன்று பிற்பகல் வெளியானது.

டேக் டைவர்ஷன் திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் கேன்ஸ் 2022 ஆம் விழாவில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொள்கிறார்.

நடிகர் மகேஷ் பாபு நடித்து இருக்கும் ‘சர்க்காரு வாரி பட்டா’ படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும், டான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

கள்ளன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தன்னை பற்றி வரும் வதந்தி தான் திருமணத்திற்கு தடையாக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து உள்ளார்.

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அர்ஜூன் கபூர் திரைத்துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்து இருக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டான் படத்தில் இடம் பெற்றும் இருக்கும், ஜலபுல ஜங் பாடலின் 1 நிமிட வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடித்து வரும், தளபதி 66 படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி