தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Kerala Story: சர்ச்சைகளுக்கு மத்தியில் சக்கை போடு போடும் ‘தி கேரளா ஸ்டோரி’ - வசூல் எவ்வளவு தெரியுமா?

The Kerala Story: சர்ச்சைகளுக்கு மத்தியில் சக்கை போடு போடும் ‘தி கேரளா ஸ்டோரி’ - வசூல் எவ்வளவு தெரியுமா?

Karthikeyan S HT Tamil

May 19, 2023, 03:44 PM IST

google News
The Kerala Story Box Office: பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
The Kerala Story Box Office: பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

The Kerala Story Box Office: பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் விபுல் ஷா தயாரிப்பில் கடந்த மே 5 ஆம் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி' (The Kerala Story). இந்த படத்தின் ட்ரைலரிலேயே கேரளாவைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாக காட்சி வெளியாகி இருந்தது. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

'தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரள இந்து பெண்கள் இஸ்லாமிய ஆண்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ளப்பட்டு, மதம் மாறி எப்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத மிஷன்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது.

இதற்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.  இத்திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அறிவித்ததை அடுத்து படம் சொன்ன தேதியில் வெளியானது. ஆனால்,  இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே திரையிடப்பட்டது. மறுநாள் இப்படத்தை திரையிட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் மறுத்து விட்டன. இருப்பினும் வட மாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தி கேரளா ஸ்டோரிக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த மே 12ஆம் தேதி இப்படம் ரிலீஸானது. கடந்த வாரம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை தாண்டிய நிலையில், இப்படம் தற்போது மொத்தமாக ரூ.171 கோடி வசூலித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இப்படம் 19.87 சதவீதம் வசூல் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி