தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஏங்க இவ்வளவு வன்மத்தோடு வாழ்றீங்க’.. முத்துகுமரனுக்கு எதிராக திருப்பும் போட்டியாளர்கள்.. இன்று தரமான சம்பவம் இருக்கு!

‘ஏங்க இவ்வளவு வன்மத்தோடு வாழ்றீங்க’.. முத்துகுமரனுக்கு எதிராக திருப்பும் போட்டியாளர்கள்.. இன்று தரமான சம்பவம் இருக்கு!

Divya Sekar HT Tamil

Oct 16, 2024, 10:19 AM IST

google News
இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது. முத்துக்குமரனுக்கு எதிராக ஆண்கள் அணியுமே தற்போது பேச தொடங்கியுள்ளனர். பெண்கள் அணி முத்துக்குமரன் செய்யும் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது. முத்துக்குமரனுக்கு எதிராக ஆண்கள் அணியுமே தற்போது பேச தொடங்கியுள்ளனர். பெண்கள் அணி முத்துக்குமரன் செய்யும் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது. முத்துக்குமரனுக்கு எதிராக ஆண்கள் அணியுமே தற்போது பேச தொடங்கியுள்ளனர். பெண்கள் அணி முத்துக்குமரன் செய்யும் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் நறுக்கென்ற பேச்சுடன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என புதிய தொகுப்பாளர் முதல் புதிய விதிமுறைகள், புதிய வீடு என அனைத்திலும் புதிய நடவடிக்கைகளை இந்த சீசன் பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது.

முதல் நாளிலே எலிமினேட்

பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கலவரத்திற்கும், கண்டெண்ட்டிற்கும பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் பல விதமான புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்கள் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி எனப் பிரிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே சாச்சனா வீட்டிலுள்ள போட்டியாளர்களால் அதிக எண்ணிக்கையில் நாமினேட் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்டார்.

ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேட்

இதுதொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், வெளியேற்றப்பட்ட 3 நாட்களில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இதையடுத்து, அவர் பெண்கள் அணி எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை மக்கள் பார்வையிலிருந்து கூறி வந்தார். இதற்கிடையில், முதல் வார முடிவில், பிராங்க் விளையாட்டு ஆண்கள் அணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையிலும், பெண்கள் அணியுடன் ஏற்பட்ட கருத்து முரணாலும் தன்னைத் தானே நாமினேட் செய்ததாலும், பேட் மேன் ரவீந்தர் முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

பத்தாவது நாளில் முதல் ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 8 பத்தாவது நாளில் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில், முத்துக்குமரன் இந்த டாஸ்க் ஆரம்பம் ஆனதிலிருந்து ஆனந்தியை விட நான் பெஸ்ட் என்று நினைக்கிறேன். சோவுக்கு பின்னாடி விஷாலை விட நான் அதிகமாக உழைத்திருக்கிறேன்‌ எனவே அவரை விட ஒரு படி நான் தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன் என முத்துக்குமரன் பேசி முடிக்க, அவரை தொடர்ந்து பேசிய விஜே விஷால் ஆங்கர்ங்கில் நான் எனது பெஸ்ட்டை கொடுத்தேன் எனக்கு முதலிடம் வேண்டுமென்று நான் நினைக்கிறேன் என சொல்கிறார். இவரைத் தொடர்ந்து பேசிய ஆனந்தி இவர்கள் இருவர் பக்கத்திலும் நான் ஆர் ஜே ஆனந்தியாக இல்லாமல் ceoவாக இருப்பதற்கு நான் எக்ஸ்ட்ரா எஃபெக்ட் போட்டேன் அதனால் நான் தான் பெஸ்ட் என்று நினைக்கிறேன் என கூறுகிறார்.

ஏங்க இவ்வளவு வன்மத்தோடு வாழ்றீங்க

ஆனந்தி பேசியதற்கு முத்துக்குமரன் சிஇஓ ஆனதற்கு ஆனந்தி எப்படி எக்ஸ்ட்ரா எஃபெக்ட் போட்டார்கள் என ஆரம்பிக்க சாச்சனா, தர்ஷா இருவரும் சிரித்து நக்கல் செய்ய கடுப்பான முத்துக்குமரன் எதற்கு இப்படி முகம் சுளிக்கிறீர்கள் என்பது போல கேட்டு உங்கள் ஃபேவரிட்சம் இங்கு காட்டாதீர்கள், ஏங்க இவ்வளவு வன்மத்தோடு வாழ்றீங்க என கோபமாக முத்துக்குமரன் சொல்ல இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

தரமான சம்பவம் காத்திருக்கிறது

ஆக மொத்தத்தில் இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிகிறது. முத்துக்குமரனுக்கு எதிராக ஆண்கள் அணியுமே தற்போது பேச தொடங்கியுள்ளனர். பெண்கள் அணி முத்துக்குமரன் செய்யும் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றைய எபிசோடிலேயே ஜாக்லின், சாச்சனா இருவரும் முத்துக்குமரன் போட்ட ஆடரால் அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் முத்துக்குமரன் பேசுவது மட்டும் தான் அது செயலில் இல்லை என ஜாக்குலின் மற்ற சில பெண்கள் அணியினரும் கூறினார்கள். இப்படி முத்துக்குமார் குமரனுக்கு எதிராக தற்போது அனைவரும் பேசி வருகின்றனர்.எனவே இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் காத்திருக்கிறது போல தெரிகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை