தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Mahesh Babu: தெலுங்கு சினிமா உலகின் இளவரசர் மகேஷ் பாபு பிறந்த நாள் இன்று.. இவர் பற்றிய தகவல்கள்

HBD Mahesh Babu: தெலுங்கு சினிமா உலகின் இளவரசர் மகேஷ் பாபு பிறந்த நாள் இன்று.. இவர் பற்றிய தகவல்கள்

Manigandan K T HT Tamil

Aug 12, 2024, 08:05 PM IST

google News
நீடா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் 1979ம் ஆண்டு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. குழந்தை பருவத்தில் 8 படங்களில் நடித்திருக்கிறார். (AP)
நீடா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் 1979ம் ஆண்டு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. குழந்தை பருவத்தில் 8 படங்களில் நடித்திருக்கிறார்.

நீடா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் 1979ம் ஆண்டு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. குழந்தை பருவத்தில் 8 படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான மகேஷ் பாபுவின் பிறந்த நாள் (ஆக.9) இன்று. எட்டு நந்தி விருதுகள், ஐந்து பிலிம்பேர் தெலுங்கு விருதுகள், நான்கு சைமா விருதுகள், மூன்று சினிமா விருதுகள் மற்றும் ஒரு ஐஃபா உத்சவம் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு திரைப்பட நடிகர்களில் ஒருவரான இவர், ஜி.மகேஷ் பாபு எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

இவர் பிறந்தது சென்னை

சென்னையில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பிறந்தார் மகேஷ் பாபு. படித்தது சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தான். இவரது தந்தை கிருஷ்ணா மிகப் பெரிய திரை நட்சத்திரம் ஆவார்.

நீடா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் 1979ம் ஆண்டு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. குழந்தை பருவத்தில் 8 படங்களில் நடித்திருக்கிறார்.

ராஜாக்குமாருடு படத்தில் கதாநாயகனாக 1999-ம் ஆண்டு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார்.

கில்லியான ஒக்கடு

அதன்பிறகு இவரது நடிப்பில் 2003இல் வெளியான படம் தான் ஒக்கடு. இந்தப் படம் தான் ஓராண்டு கழித்து கில்லி என்ற பெயரில் ரீமேக் ஆனது.

அதன்பிறகு, பிசினஸ்மேன், போக்கிரி, தூக்குடு, ஸ்ரீமாந்துடு, பரத் எனும் நான், மகரிஷி என பல திரைப்படங்களில் நடித்தார்.

மகரிஷி படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான கார்ப்பரேட் சிஇஓ வேடத்தில் கலக்கியிருப்பார். பரத் எனும் நான் படத்தில் முதலமைச்சராக நடித்து பிரமாதப்படுத்தினார்.

பெஸ்ட் பாப்புலர் படம் என்ற பிரிவில் மகரிஷி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. சரிலேரு நீக்கெவரு என்ற படம் ரூ.260 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

பிரின்ஸ் என மகேஷ் பாபு அன்புடன் இவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். அரசு சாரா அமைப்பு ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். நம்ரதா ஷிரோத்கர் என்ற நடிகையை 2005 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சர்காரி வாரி பாட்டா என்ற படம் ரிலீஸாக பெரும் வெற்றி பெற்றது.  

மகேஷ் பாபு, "மகேஷ் பாபு அறக்கட்டளை", ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நிறுவினார். உயிர்காக்கும் பிறவி இதய அறுவை சிகிச்சைகளுக்கு நிதியளிப்பதன் மூலம் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதில் இந்த அறக்கட்டளை முதன்மையாக கவனம் செலுத்துகிறது. அறக்கட்டளையானது தொண்டு அறக்கட்டளை மற்றும் "ஹீல் எ சைல்ட்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தையும் ஆந்திர மருத்துவமனைகள் மற்றும் ரெயின்போ மருத்துவமனைகளுடன் இணைந்து நடத்துகிறது. இது கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, பின்தங்கிய பின்னணியில் இருந்து தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.

முழுமையான வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து, மகேஷ் பாபு அறக்கட்டளை ஆந்திராவில் உள்ள புரிபாலம் மற்றும் தெலங்கானாவில் உள்ள சித்தாபுரம் ஆகிய இரண்டு கிராமங்களை தத்தெடுத்தது. இக்கிராமங்களில், பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்கள், நூலகங்கள், சாலைகள், வடிகால் அமைப்புகள் கட்டுதல் உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. கூடுதலாக, அவர்கள் முக்கியமான டிஜிட்டல் திறன்களுடன் கிராமவாசிகளை சித்தப்படுத்த கணினி ஆய்வகங்களை நிறுவியுள்ளனர்.

இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி