தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “திராவிட மாடல்ன்னு சொல்லிக்கிட்டு.. ஊழல் கபடதாரிகளே.. நான் பத்தோடு பதினொன்று இல்ல ப்ரோ”- மாநாட்டில் வெறியான விஜய்

“திராவிட மாடல்ன்னு சொல்லிக்கிட்டு.. ஊழல் கபடதாரிகளே.. நான் பத்தோடு பதினொன்று இல்ல ப்ரோ”- மாநாட்டில் வெறியான விஜய்

Oct 27, 2024, 07:51 PM IST

google News
திராவிட மாடல்ன்னு சொல்லிகிட்டு.. ஊழல் கபடதாரிகளே.. நான் பத்தோடு பதினொன்று இல்ல ப்ரோ”- மாநாட்டில் வெறியான விஜய்தமிழக வெற்றிக்கழகத்தின் எதிரி யார் என்று விக்கிரவாண்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் விஜய் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.
திராவிட மாடல்ன்னு சொல்லிகிட்டு.. ஊழல் கபடதாரிகளே.. நான் பத்தோடு பதினொன்று இல்ல ப்ரோ”- மாநாட்டில் வெறியான விஜய்தமிழக வெற்றிக்கழகத்தின் எதிரி யார் என்று விக்கிரவாண்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் விஜய் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.

திராவிட மாடல்ன்னு சொல்லிகிட்டு.. ஊழல் கபடதாரிகளே.. நான் பத்தோடு பதினொன்று இல்ல ப்ரோ”- மாநாட்டில் வெறியான விஜய்தமிழக வெற்றிக்கழகத்தின் எதிரி யார் என்று விக்கிரவாண்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநாட்டில் விஜய் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பேசிக்கொண்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் தங்களுடைய எதிரி யார் யார் என்று கூறியிருக்கிறார்.

யார் நம் எதிர்கள்?

இது குறித்து தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது, “அரசியலில் நம்முடைய நிலைப்பாடு என்பதுதான் இங்கு மிக மிக முக்கியமானது. அதுதான் நம்முடைய எதிரிகள் யார் என்று நமக்குச் சொல்லும். நாம் சரியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலே நம்முடைய எதிரிகள் யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அவர்களே நம் கண் முன்னே வந்து நின்று விடுவார்கள். நம்மை எதிர்க்கவும் ஆரம்பித்து விடுவார்கள். எதிரிகள் இல்லாத வெற்றி வேண்டுமென்றால் நமக்கு சாத்தியப்படலாம். ஆனால் களம் என்பது அப்படி இருக்காது. ஆனால், களத்தில் நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது நம்முடைய எதிரிகள் தான்.

நாம் நம்முடைய கட்சியை அறிவித்த போது.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் குரலை நம் கட்சியினுடைய அடிப்படை கோட்பாடாக நாம் கூறிய போதே நம்முடைய எதிரி யார் என்பதை நாம் தெரிவித்து விட்டோம். பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு கிடையாது; அது கூடவே கூடாது. அப்படி ஒரு சமதர்மக் கொள்கையை கையில் எடுத்த போதே, இங்கு கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

கதறல் சத்தம் அதிகமாக கேட்கும்

இப்போது மாநாட்டில் அதனை நான் ஓப்பனாக அறிவித்த பின்னர் அந்த கதறல் இன்னும் அதிகமாக கேட்கும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய அடிப்படை கோட்பாடுக்கு எதிராக இருப்பது போல, மக்களை மதம், சாதி, இனம், மொழி, பாலினம் வேலை, பணம் உள்ளிட்டவற்றை வைத்து சூழ்ச்சி செய்யும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும்தான் நம்முடைய எதிரியா? அப்படியானால் நமக்கு ஒரே ஒரு எதிரிதானா என்று கேட்டால் இல்லை என்பதே என்னுடைய பதில்.

அப்படியானால் நம்முடைய இரண்டாவது எதிரி ஊழல் படிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது. பிளவுவாத சக்திகளை கூட நாம் யார் என்று எளிதாக கண்டுபிடித்து விடலாம். அது ஒரு மதம் பிடித்த யானை போல. அது செய்கிற அராஜகத்தின் மூலமாக அதுவே அதை காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இந்த ஊழல் இருக்கிறதே.. அது எங்கே ஒளிந்து இருக்கிறது; எந்த வடிவில் ஒளிந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

நாடகம் போடும்.

அது கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். கலாச்சார பாதுகாப்பு வேசமும் போடும். அதற்கு முகமே இருக்காது. முக மூடிதான் இருக்கும். முகமூடி தான் அதற்கான முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழலில் ஊறிப்போன கபடதாரிகள்தான் இங்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள். இனி இங்கு வருபவர்களின் மீது அந்தக்கலரை பூசுவது, இந்தக்கலரை பூசுவது என்று இனி நீங்கள் எந்த மோடி மஸ்தான் வேலையைச் செய்தாலும், ஒன்றும் நடக்கப் போவது கிடையாது. எங்களுடைய கலரை தவிர, வேறு யாரும் எங்கள் மீது எந்த கலரையும் அடிக்கவே முடியாது.

இங்கு பத்தோடு பதினொன்றாக இருப்பதற்கு வரவில்லை ப்ரோ. நான் எல்லா திட்டங்களையும் யதார்த்த வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வகையில்தான் அமல்படுத்த போகிறேன். நான் இங்கு காசுக்காக வரவில்லை. நல்ல காரணத்திற்காக வந்திருக்கிறேன். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது ஏ டீம், பிடீம் என்று அடையாளப்படுத்துவது உள்ளிட்டவற்றையெல்லாம் வைத்து இந்தப் படையை சாய்த்து விடலாம் என்று நினைத்து விடாதீர்கள்

திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வைத்து, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அடுத்த எதிரி அரசியல் எதிரி. கொள்கை அடிப்படையில் நாம் திராவிடத்தையோ, தமிழ் தேசியத்தையோ பிரித்துப் பார்க்கப் போவதே இல்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த நாட்டின் இரு கண்கள் என்பதுதான் நம்முடைய தாழ்மையான கருத்தும். ஆகையால், நாம் நம்மை எந்த ஒரு அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளாமல், இந்த மண்ணுக்கான மதச்சார்பின்மையற்ற சமூக நீதிக் கொள்கைகளை அடையாளங்களாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி