Serials TRP: டிஆர்பியில் செம அடி வாங்கிய தொலைக்காட்சி.. முதல் ஐந்து இடங்கள் எந்த சீரியல்கள் தெரியுமா?
Jan 21, 2024, 01:00 PM IST
கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும், அவற்றின் இடங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும், அவற்றின் இடங்களும் இதோ..
சுந்தரி
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சுந்தரி. இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 5 வது இடத்தில் சுந்தரி இருக்கிறது. இரண்டு குட்டி பிள்ளைகளுடன் சுந்தரி செயல் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து.
ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது. ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. டிஆர்பியில் எதிர்நீச்சல் சீரியல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இந்த வார டிஆர்பியில் எதிர்நீச்சல் சீரியல் 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் தான் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் முதலிடத்தில் இருந்து மாஸ் காட்டிக் கொண்டிருந்தது.
வானத்தை போல
சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. அண்ணன், தங்கை பாசத்தை அழகாக காண்பிக்கும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பமான ஒன்று. பலரும் இந்த சீரியல் பார்த்த பிறகு நமக்கு இப்படி ஒரு அண்ணன், தங்கை இல்லையே என ஏங்கி இருக்கிறார்கள். டிஆர்பியில் வானத்தை போல சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கயல்
சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் கயல் சுமக்கிறார். அவர் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகளை ஏழுகிறது. அதை எல்லாம் தாண்டி பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. கயல் சீரியல் டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பெண்ணே
கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த பெண், குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஆனந்தி. வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதே சிங்கப்பெண்ணே கதை. சமீபத்தில் தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வார டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது.
டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்கள் பிடித்த சீரியல்கள் அனைத்து சன் தொலைக்காட்சியை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்