தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Producer Council: அமைதியாக நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல்.. முடிவுகள் எப்போது?

Tamil Producer Council: அமைதியாக நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல்.. முடிவுகள் எப்போது?

Aarthi V HT Tamil

Apr 30, 2023, 05:59 PM IST

google News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று நடந்து முடிந்து உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று நடந்து முடிந்து உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் இன்று நடந்து முடிந்து உள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் என்றால் அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தான். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி பதிவியில் இருக்கிறார்.

இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

காலை முதல் நடந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், மிஷ்கின், ஐசரி கணேஷ் அடையாறு மையத்துக்கு நேரில் சென்று வாக்கினை பதிவு செய்தனர்.

சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர்.

மேலும் இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி உள்ளனர்.

இன்று நிறைவடைந்த தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி