Top 10 cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்
Aug 12, 2024, 05:55 PM IST
Top 10 Cinema: ராயன் திரைப்படம் தற்போது உலகளவில் 145 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து 150 கோடியை நெருங்கி இருக்கிறது.- டாப் 10 சினிமா செய்திகள்
1.சூர்யா, அஜித் மாதிரி ரசிகர் பட்டாளம் இல்லையா? - பத்திரிகையாளர் கேள்விக்கு விக்ரம் பதில்!
அவர் பேசும் போது “நானும் தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களில் நடித்தவன்தான். அதனால் மற்ற ஹீரோக்கள் போலவும் எனக்கும் படம் நடிக்கத் தெரியும். ஆனால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அந்த வகையில் தங்கலானுக்கு என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என் ரசிகர்கள்தான்” என்றார்.
2.சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குநர் சிவா பேசும் போது, " உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவன் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.
தங்கலானுக்கு சிக்கல்
3. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணம் கொடுத்தனர். இவர் அந்த பணத்தை பலரிடம் கடனாக கொடுத்தார். அதில், நிதி இழப்பு ஏற்பட, அவர் திவாலனவராக அறிவிக்கப்பட்டார். காலப்போக்கில் அவர் காலமானார்.
இவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்திடன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லாலிடம் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை வசூல் செய்து வருகிறார். அந்த வரிசையில் ஞானவேல் ராஜாவும் பணம் வாங்கி இருப்பதால்,அவர் தயாரித்திருக்கும் தங்கலான் மற்றும் கங்குவா படத்தை வெளியிடும் முன்னர், ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
4. இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து கமலின் 65 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியிடபட்டு இருக்கிறது.
5. நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் நாளில் இருந்தே இந்தப்படம் அமோக வரவேற்பை பெற்று வந்தது.
உலகளவில் இப்படம் 7 நாட்களில் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து தனுஷின் கேரியரில் குறுகிய நாட்களில் ரூ. 100 கோடியை தோட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில் இந்தப்படம் தற்போது உலகளவில் 145 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து 150 கோடி ரூபாயை நெருங்கி இருக்கிறது.
6. நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது. இதையொட்டி மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘ரகு தாத்தா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அப்போது அவர் தனது அரசியல் வருகை குறித்து பேசினார்.
அவர் பேசும் போது," நான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம்." என்றார்.
7. கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க அஜய் ஞானமுத்து படத்தை தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த படத்தின் திரைக்கதை மிகவும் சூப்பராக இருப்பதாக விநியோகஸ்தர் வருண் தெரிவித்து இருக்கிறார்.
8. கீர்த்தி சுரேஷ் மதுரை கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
9. மாளவிகா மோகனன் சூர்யாவின் கண் மிகவும் நன்றாக இருக்கும். து பல்வேறு அசைவுகளை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தும். அவருடன் நடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்
10. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரமின் தங்கலான்,அருள் நிதியின் டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் மோதுகின்றன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்