Samsara Sangeetham: குழந்தை நட்சத்திரமாக “ஐ ஏம் ஏ சூப்பர் ஸ்டார்” என பாடிய சிம்பு! டி.ஆரின் சிறந்த பேமிலி படம்
Jul 21, 2024, 07:00 AM IST
கணவன் - மனைவி உறவு குறித்து கதையம்சத்தில் டி.ஆரின் சிறந்த பேமிலி படமாக இருக்கும் சம்சார சங்கீதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக “ஐ ஏம் ஏ சூப்பர் ஸ்டார்” என சிம்பு பாடிய பாடல் சூப்பர் ஹிட்டானது.
தமிழ் சினிமாவில் 80ஸ்களில் டாப் இயக்குநராக வலம் வந்த டி.ராஜேந்தர் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான பேமிலி டிராமா திரைப்படம் சம்சார சங்கீதம். நடிகை ரேணுகா ஹீரோயினாக அறிமுகமானது இந்த படத்தில் தான்.
வழக்கமாக தனது படங்களில் இயக்கத்துடன் நடிப்பது தொடங்கி, கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்துத்துறைகளையும் ஒருவராகவே நிர்வகித்து பிளாக் பஸ்டர் வெற்றிகளை கொடுப்பவராக இருந்து வந்தார் டி. ராஜேந்தர். இந்த படத்திலும் மேற்கூறிய அனைத்தையும் அவர் ஒற்றை ஆளாகவே கவனித்து கொண்டார்.
அத்துடன் இந்த படத்தில் தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார்.
கணவன் - மனைவி உறவு பற்றிய கதை
திருமணமான தம்பதியினர் சண்டைக்கு பின் பிரிந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். மகனாக சிம்பு தந்தையுடன் தங்கியிருக்க, மகள் தாயுடன் தங்கியுள்ளார்.
சிம்பு அம்மாவின் பாசத்துக்கு ஏங்குகிறார். பிரிந்த குடும்பம் எப்படி மீண்டும் ஒன்றிணைகிறது என்பது படத்தின் கதை.
கணவன் - மனைவி இடையிலான ஈகோ சண்டை, பிரிவு, பாசம், புரிதல் போன்ற விஷயங்களை எமோஷனலாக செல்லும் விதமாக படத்தின் திரைக்கதை, காட்சி அமைக்கும் அமைந்திருக்கும்.
சிம்புவுக்கென ஸ்பெஷல் பாடல்
குழந்தை நட்சத்திரமான சிம்புவுக்காக என தனியாக பாடல் ஒன்றும் படத்தில் இடம்பிடித்திருக்கும். ஐ ஏம் ஏ லிட்டில் ஸ்டார் என்ற அந்த பாடல் சிம்பு விதவிதமான கெட்டப்புகளில் நடனமாக, பிரமாண்ட் செட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இந்த பாடல் அப்போது சூப்பர் ஹிட்டானதுடன் அதிமாக ஒலிக்கப்பட்ட பாடலாக இருந்தது.
டி. ராஜேந்தர் இசையமைப்பில் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பிடித்திருக்கும்.
படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அழுத நடிகை ரேணுகா
சம்சார சங்கீதம் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தமிழ் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பே இல்லை. டி ராஜேந்தர் கச்சா மூச்சா என்று திட்டுவார். வசனம் ஒழுங்காக வரவில்லை என்றால் மிகவும் கடுமையாக திட்டுவார்.ஒவ்வொரு நாளும் அங்கு நான் அழுததுதான் அதிகம்.
அப்போதெல்லாம் ரீல் ரோல் என்றவுடன் கிர்ர் என்ற சத்தம் கேட்கும். உடனே உள்ளுக்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும். டி ராஜேந்திரிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால், ஒரு டேக்கில் பேசிய வசனம் அடுத்த டேக்கில் இருக்காது.
ஸ்கிரிப்ட் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடக்கும். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கிளைமாக்ஸ் வரும்போது தான் ஆகா, இதற்கு முன்னதாக எடுத்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமே என்று தோன்றியது. அதற்குள் படமே முடிந்து விட்டது. டி ஆர் எனக்கு உண்மையிலேயே நல்ல குரு என்று படத்தில் நடிக்க அனுபவம் குறித்து நடிகை ரேணுகா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
நற்பணிகள் செய்த டி.ஆர்
அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தாய்மார்களும், வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் திரை உலக அடிமட்ட தொழிலாளிகளுக்கும் பயன் பெறும் வகையில் மாதம் ரூ. 10 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரசி, 50 கிலோ அரசி வழங்கப்படும்.
அக்டோபர் 3 முதல் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டு வரதட்சனை கொடுமைால் வாடும் ஏழை தங்கைமார்களுக்கு திருமண உதவி. தொழிலற்று துயரில் வாடு முதியோரகளுக்கு சிறுதொழில் புரிய பண உதவி. ஏழை மாணவர்களுக்கு படிப்புதவி.
சம்சார சங்கீதம் 75 நாள்கள் ஆகியிருப்பதால், 100வது நாள் அன்றோ அல்லது என் மகந் லிட்டில் சூப்பர் ஸ்டார் டி.ஆர். சிலம்பரசன் பிறந்த நாளான 3ஆம் தேதி அன்றோ 100 ஏழை தங்கைமார்களுக்கும் தங்கதாலியும் பட்டுசேலையும் வழங்கப்படும். இது தவிர 10 ஆயிரம் பேருக்கும் அன்னதானமும் வழங்கப்படும்
ரசிகர்கள் கவர்ந்த படம்
டி.ராஜேந்தருக்கு 1983இல் வெளியான உயிருள்ளவரை உஷா படம் அவருக்கு கம்பேக் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு தொடர்ந்து பேமிலி டிராமா படங்களாக கொடுத்து வெற்றி இயக்குநராக வலம் வந்தார். அந்த வகையில் அவருக்கு தொடர்ந்து 7வது வெற்றியாக இந்த படம் அமைந்தது. கணவன் மனைவி குறித்து தமிழில் வெளியான சிறந்த குடும்ப திரைப்படமாக இருந்து வரும் சம்சார சங்கீதம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்