தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya42: வேல்பாரி நாவலில் தோன்றும் பாரி மன்னனாக நடிக்கும் சூர்யா?

Suriya42: வேல்பாரி நாவலில் தோன்றும் பாரி மன்னனாக நடிக்கும் சூர்யா?

Sep 10, 2022, 05:59 PM IST

google News
Suriya42 படத்தில் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் கொங்கு பகுதியை ஆண்ட மன்னனின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.
Suriya42 படத்தில் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் கொங்கு பகுதியை ஆண்ட மன்னனின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.

Suriya42 படத்தில் 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் கொங்கு பகுதியை ஆண்ட மன்னனின் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் பரவுகின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பண்டைய காலத்து தமிழ் பெயர்கள் இடம்பிடித்திருப்பதோடு, கடைசியாக சாமுராய்கள் போன்று படைவீரன் அணிந்தவாறு சூர்யா நிற்குமாறு காட்டப்பட்டிருக்கும். இதை வைத்து பார்க்கையில் நிச்சயமாக இது பிரியட் படமாகத்தான் இருக்கும் என தெரிகிறது.

இதையடுத்து சூர்யா இந்தப் படத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்போது பிரபல நாவலான வேல்பாரி கதையில் இடம்பிடித்துள்ள மன்னர் பாரியின் வேடத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேல்பாரி நாவல், பரம்புநாடு என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தற்போதைய கோபிசெட்டிபாளையம் பகுதியை சுற்றிலும் உள்ள மலைநாட்டு பகுதியான 300க்கும் மேற்பட்ட கிராமங்களை செல்வச் செழிப்பாக வைத்த பாரி என்ற மன்னன் பற்றியை கதையாக அமைந்துள்ளது. பழங்கால புலவர் கபிலரின் நண்பரான பாரி, தற்போது இருக்கும் கோபிசெட்டிபாளையம் பகுதியை ஆண்டதாகவும், அந்த பகுதி பாரியூர், பாராபூரி என்று அழைக்கப்பட்டதாகவும் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வலிமையும், வீரமும் மிக்க மன்னரான பாரியை எதிரிகளை வீழ்த்திய பிறகு மன்னரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்ந்தவர்கள் பின்னர் அருகிலுள்ள பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர் என்று வேல்பாரி நாவலில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வரலாற்று கதையில்தான் பாரி வேடத்தில் சூர்யா நடிக்கிறாராம். பாலிவுட் நடிகை திஷா பதானி இந்தப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லே, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே தான் பாரி வேடத்தில் நடிப்பது குறித்து லீட் கொடுத்திருந்தார் நடிகர் சூர்யா. கார்த்தியின் விருமன் பட நிகழ்ச்சியில் பேசும்போது, சு. வெங்கடேசனுன் கூட்டணி அமைத்திருப்பதாகவும், வேல்பாரிக்கான பணிகள் தொடங்கியிருப்தாகவும் கூறிய சூர்யா, அதற்கான மேடையில் முழுவதுமாக தெரிவிப்பதாக கூறினார்.

தற்போது சூர்யா பேசிய அந்த விடியோ வைரலாகி வருகிறது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி