தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலா- சூர்யா இணையும் டைட்டில் அறிவிப்பு வெளியீடு!

பாலா- சூர்யா இணையும் டைட்டில் அறிவிப்பு வெளியீடு!

Aarthi V HT Tamil

Jul 11, 2022, 09:42 PM IST

google News
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும், எதற்கும் துணிந்தவன் படம் ஃபாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தை, சூர்யா - ஜோதிகா தம்பதியின் தயாரிப்பு நிறுவனமான, 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

சூர்யா 41 என தற்காலிகமாக அழைத்து வந்த இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதன் படி படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி