தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ‘ஆனந்திடம் ஜாலியாக பேசப்போன மகேஷ் சுயம்புவின் செய்திருக்கும் சதி..’ சிங்கப்பெண்ணே சீரியல்!

Singapenne Serial: ‘ஆனந்திடம் ஜாலியாக பேசப்போன மகேஷ் சுயம்புவின் செய்திருக்கும் சதி..’ சிங்கப்பெண்ணே சீரியல்!

Aug 21, 2024, 02:11 PM IST

google News
Singapenne Serial: ஆனந்தியிடம் ஜாலியாக பேச முடியாதா என்று கேட்கிறான். அதற்கு முடியாது என்று பதில் வருகிறது. இதையடுத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். இதற்கிடையே சதிலீலாவதி, தான் கிளம்புவதாக சொல்ல எல்லோரும் சோகமாக நிற்கின்றனர். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: ஆனந்தியிடம் ஜாலியாக பேச முடியாதா என்று கேட்கிறான். அதற்கு முடியாது என்று பதில் வருகிறது. இதையடுத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். இதற்கிடையே சதிலீலாவதி, தான் கிளம்புவதாக சொல்ல எல்லோரும் சோகமாக நிற்கின்றனர். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தியிடம் ஜாலியாக பேச முடியாதா என்று கேட்கிறான். அதற்கு முடியாது என்று பதில் வருகிறது. இதையடுத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். இதற்கிடையே சதிலீலாவதி, தான் கிளம்புவதாக சொல்ல எல்லோரும் சோகமாக நிற்கின்றனர். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

சிங்க பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் ஆனந்திக்கு மஞ்சள் புடவை கட்டி, காலில் அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கே வரும் மகேஷ், ஆனந்தியிடம் ஜாலியாக பேச முடியாதா என்று கேட்கிறான். அதற்கு முடியாது என்று பதில் வருகிறது. இதையடுத்து அவன் அதிர்ச்சி அடைகிறான். இதற்கிடையே சதிலீலாவதி, தான் கிளம்புவதாக சொல்ல எல்லோரும் சோகமாக நிற்கின்றனர். இன்னொரு பக்கம் சுயம்புவின் திட்டத்தை எண்ணி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறாள். 

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்று மகேஷ் அமைதியாக வெளியே உட்கார்ந்து இருக்க, சதி லீலாவதி அவனிடம் வந்து ஏன் என்ன ஆயிற்று? ஏன் நீ சாப்பிடவில்லை என்று கேட்டாள். அதற்கு மகேஷ், தனக்கு கயிறு இழுக்கும் போட்டியில் கையில் காயம் பட்டதால், சாப்பிட முடியவில்லை என்று சொல்ல, திடீரென்று அதீதமாக எமோஷனலான சதி லீலாவதி, அவனது கையைப் பிடித்து ஒரு பெற்ற தாயைப் போல பதறினாள். 

இதைப் பார்த்து நெகிழ்ந்த மகேஷ், எனது அம்மா போலவே நீங்கள் பதறுகிறீர்கள் என்றான். இதையடுத்து அங்கு வந்த ஆனந்தியின் அம்மா, என்ன ஆயிற்று என்று கேட்க, நடந்த விஷயத்தை லீலாவதி சொன்னாள். இதையடுத்து அவளும் பதறினாள். ஒரு கட்டத்தில் ஆனந்தியின் அம்மா, மகேஷால் சாப்பிட முடியாததை குறிப்பிட்டு, சாப்பாட்டை சதிலீலாவதியையே ஊட்டச் சொல்ல, லீலாவதி மகேஷுக்கு சாப்பாடு ஊட்டினாள். தொடர்ந்து எல்லாம் முடிந்த பின்னர், சதிலீலாவதி நாம் ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகிறோம், மகேஷுக்கு நாம் ஏன் இவ்வளவு இறங்கி வந்து ஊட்டி விடுகிறோம் என்றெல்லாம் தனக்குள்ளையே கேள்வி கேட்டுக்கொண்டாள். 

இது சரி இல்லை 

தொடர்ந்து இது சரி இல்லை என்று உணர்ந்த அவள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்தாள். இன்னொரு பக்கம், போட்டியில் தோற்ற சுயம்புலிங்கம் மித்ராவின் வருகைக்காக காத்திருந்தான். ஆனால் மித்ராவோ சாவகாசமாக வந்து, சுயம்புவை மரியாதை இல்லாமல் பேசினாள். 

தொடர்ந்து ஏன் இப்படி பேசுகிறாய் என்று சுயம்பு கேட்ட பொழுது, நீ கயிறு இழுக்கும் போட்டியிலும் தோற்று விட்டாய், ஆனந்தியையும் தீமிதிக்க அனுமதிக்க விட்டு விட்டு, அவரது அப்பாவையும் கோயில் பொறுப்பை ஏற்க வைத்து விட்டாய். எல்லா இடங்களிலும் நீ தோற்று விட்டாய் என்று மித்ரா பேச, இதையடுத்து தன்னுடைய திட்டத்தை சுயம்பு சொன்னான். அதன்படி, கோயில் பொறுப்பை ஆனந்தியின் அப்பாவை ஏற்க வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. 

சுயம்புவின் பலே திட்டம் 

ஆனந்தி தீ மிதிக்கும் பொழுது அசம்பாவிதத்தை ஏற்படுத்த கோயில் நகையை தன்னுடைய ஆட்களை கொண்டு திருட வைத்து, அந்த பழியை ஆனந்தியின் அப்பா மீது போட்டு ஆனந்தியையும், அவரது அப்பாவையும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, இந்த ஊரில் ஒரு அடிமை போல வாழ வைப்பேன் என்று சவால் விடுகிறான். இதற்கிடையே மகேஷ் ஆனந்தியின் அப்பாவிடம் ஆனந்தியை பெண் கேட்க போவதாக சொல்ல, மித்ரா அதை தடுக்கிறாள். ஆனால் அவளையும் மீறி மகேஷ் அங்கு செல்கிறான். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை