Silambarasan: கடு கடு விமர்சனங்கள்.. கைவிட்ட காதலிகள்.. முன் தள்ளிய தொப்பை.. தூள் பறத்திய சிம்பு! - ஆத்மன் ரகசியம்!
Feb 03, 2024, 10:00 AM IST
அப்படி நீங்கள் சுத்தம் செய்யும் போது வெளியில் எல்லாமே இயல்பாகவே நல்ல படியாக நடக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டதற்கு காரணமே, நான் உள்ளே நிறைய அடிவாங்கியதுதான். மனசு மிகவும் கஷ்டப்பட்டு விட்டது
பிரபல நடிகரான சிலம்பரசன் இன்று தன்னுடைய 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தான அறிவையும் பெற்றிருக்கும் சிலம்பரசன் இடையில் காதல் தோல்வி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் அதிகமாக எடை கூடினார்.
இனி சிம்பு அவ்வளவுதான் என்று எல்லோரும் கிண்டலடித்த போது, கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையை குறைத்தார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அப்போது அவர் கமிட் ஆன திரைப்படம்தான் ஈஸ்வரன். இந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் பேசியவற்றை அவரின் பிறந்தநாளன்று மீண்டும் தெரிந்து கொள்ளலாம்.
அவர் பேசும் போது, “இன்று நெகட்டிவான விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. யாருக்கும், யாரையும் பிடிக்க வில்லை. போட்டி பொறாமை அதிமாகி இருக்கிறது. எதை செய்தாலும் அதை குறை சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
அதற்கென்று ஒரு கூட்டமே இருக்கிறது. இதெல்லாம் தேவையே இல்லை. தயவு செய்து அட்வைஸ் செய்வதை நிறுத்துங்கள். சுற்றி இருப்பவர்களிடம் அட்வைஸ் கேட்பதையும் நிறுத்துங்கள். எல்லோரும் எதையோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருப்பீர்கள்.
நான் இன்று இதனை உங்களுக்காக சொல்கிறேன். இங்கு பிரச்சினை என்று வெளியில் எதுமே இல்லை. நீங்கள் உங்கள் மனதை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே சுத்தம் செய்யுங்கள்.
அப்படி நீங்கள் சுத்தம் செய்யும் போது வெளியில் எல்லாமே இயல்பாகவே நல்ல படியாக நடக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டதற்கு காரணமே, நான் உள்ளே நிறைய அடிவாங்கியதுதான். மனசு மிகவும் கஷ்டப்பட்டு விட்டது.
அதனால்தான் நான் எடை அதிகரித்தேன். அதனால்தான் என்னால் ஷீட்டிங்கிற்கு சரிவர செல்ல முடியவில்லை. வாழ்க்கையிலும் எதையுமே என்னால் சரியாக செய்ய முடியவில்லை.
அதனால்தான் என் உள்ளே சரி செய்வதற்கு முயற்சி செய்தேன். கடவுள் நம்முள்ளேதான் இருக்கிறார். உள்ளே சரி செய்த பின்னர் வெளியில் எல்லாமே சரியாகி விட்டது. எல்லாரிடமும் அன்பாக இருங்கள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்