தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மெட்டுக்கு பாட்டு… போட்டிக்கு போட்டிக்கு.. நடுவராக வந்த டி இமான்.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 இன்று முதல் தொடக்கம்

மெட்டுக்கு பாட்டு… போட்டிக்கு போட்டிக்கு.. நடுவராக வந்த டி இமான்.. சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 இன்று முதல் தொடக்கம்

Nov 16, 2024, 07:48 AM IST

google News
பிரபல இசையமைப்பாளர் டி இமான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் டி இமான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் டி இமான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

விஜய் டிவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசனுடன் ஒளிபரப்பாகவுள்ளது!

விஜய் டிவி சூப்பர் சிங்கர்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. சிறந்த மழலை பாடகரை தேடும் முயற்சியாக அமையும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணி கொண்ட குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள். அதில் நன்றாக பாடும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கிடையில் போட்டி நடத்தப்படும்.

அந்தப்போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு, பரிசுத்தொகை வழங்கப்படும். கூடவே இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலம் கலைநிகழ்ச்சிகள், திரைத்துறையில் பாடும் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றையும் வழங்கும் என்பதால், இந்த நிகழ்ச்சியில் பாடும் திறமை கொண்ட தங்களுடைய குழந்தைகளை பாட வைக்க பெற்றோர் போட்டி போடுவர். அந்தப்போட்டியும், குழந்தைகளின் பாடும் திறமையும்தான் இந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு அழைத்து சென்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 10 வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது.

 

முதல் முறையாக, இசையமைப்பாளர் டி. இமான்

ஆம், இன்று முதல் ஒவ்வொரு வார சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது பாடும் திறமைகளை வெளிப்படுத்தும் வெளிப்படுத்த இருக்கிறார்கள். முதல் முறையாக, இசையமைப்பாளர் டி. இமான் இந்த நிகழ்ச்சியில் புதியதாக இணைந்து கே.எஸ். சித்ரா மற்றும் மனோவுடன் பாடகர்களுக்கு வழிகாட்டும் நடுவர்களில் இணைந்திருக்கிறார். வழக்கம் போல மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே மீண்டும் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10

முன்னதாக, சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 புரோமோக்களை வெளியிட்டது. ஒவ்வொரு ப்ரோமோவும், ‘ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்! என்பதை கான்செப்ட்டாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது.

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. கிருஷ்ணமூர்த்தி, அல்கா அஜித், ஆஜீத், ஸ்பூர்த்தி, ப்ரிதிகா, ஹ்ரிதிக், கிரிஷாங் மற்றும் ஸ்ரீநிஷா போன்ற முன்னாள் வெற்றி பெற்ற பங்கேற்பாளர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணி பாடகர்களாக திரையுலகில் பிரகாசிக்கின்றனர். தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த மேடையில், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் பணிபுரியவும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை