D imman: துரோகம்.. விவாகரத்து.. மறுமணம்.. ‘நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துரும்மா’ - பேட்டியில் உடைந்த டி. இமான்
D imman: சில பேர் நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்றால் இல்லைதான். அவர்களை நாம் எந்த நபர்களைக் கொண்டும் நிரப்பிட முடியாது. - டி. இமான்

டி இமான் தன்னுடைய அம்மா குறித்து மிகவும் எமோஷனலாக கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அம்மா, என்னுடைய இசையில் கடைசியாக பார்த்த திரைப்படம், தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம். அப்போது அவரை தியேட்டருக்கு வீல் சேரில் தான் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக மாறியது. அந்தப் படத்தை பார்த்த பின்னர், என்னுடைய அம்மா, என்னிடம் வந்து கையை மிகவும் இறுக்கிப் பிடித்து, சூப்பராக இசையமைத்திருக்கிறாய் என்று மெய்சிலிர்த்தார். அதனை என்னால் மறக்கவே முடியாது.
நான் அப்படியே உடைந்து போய் விட்டேன். என்னுடைய ஸ்டூடியோவில் என்னுடைய அம்மாவின் போட்டோவை வைத்திருக்கிறேன்.
அவருடைய மறைவை என்னால் இன்று வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் என்னவென்றால், அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கம் போல காலையில் நான் பாடலுக்கான ரெக்கார்டிங் வேலைகளில் இருந்தேன். அப்பொழுதே அம்மா இறந்து விட்டார். ஆனால் அப்பா என்னிடம் சொல்லவே இல்லை.
