தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  29 Years Of Puthiya Mannargal: அரசியலில் புரட்சிக்கான விதை.. புதிய மன்னர்கள்!

29 Years of Puthiya Mannargal: அரசியலில் புரட்சிக்கான விதை.. புதிய மன்னர்கள்!

Marimuthu M HT Tamil

Dec 02, 2023, 05:15 AM IST

google News
புதிய மன்னர்கள் திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
புதிய மன்னர்கள் திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

புதிய மன்னர்கள் திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

புதிய மன்னர்கள் திரைப்படமானது டிசம்பர் 2 1994ஆம் ஆண்டு உலகமெங்கும் ரிலீஸானது. இப்படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது எனலாம். இப்படத்தை விக்ரமன் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

படத்தின் கதை என்ன? இப்படத்தில் கல்லூரியில் படிக்கும் சத்யமூர்த்தி (விக்ரம்), வித்யா(மோகினி), ஆராய்ச்சி அரிஆனந்தம் (விவேக்), பப்லு பிரிதிவிராஜ், ஸ்ரீமன், தாமு மற்றும் சில நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதில் சத்யமூர்த்தி கல்லூரியின் சேர்மன் தேர்தலில் வெற்றிபெறுகிறார். பின், இந்த மாணவர்களில் ஒருவர் முதலமைச்சர் ஆன தமிழ்மகன்(வினுச் சக்கரவர்த்தி)செல்லும் வாகனத்தின் கான்வாயை இடைமறித்ததால் அரசியல் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதை அருகில் இருந்து பார்க்கும் வித்யா(மோகினி), தனது மாமன் பாண்டியனுடன் (பாபு கணேஷ்)திருமணம் செய்ய முயற்சிக்கையில் வன்புணர்வு செய்யப்பட்டு அரசியல் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். மேலும் அச்சம்பவத்தின்போது பாண்டியனும் கொல்லப்படுகிறார். இதில் அவரது சக கல்லூரி நண்பர்கள் கொதித்து எழுகின்றனர். அதில் சத்யமூர்த்தி(விக்ரம்) என்னும் கல்லூரி மாணவர் தலைவர், தனிக்கட்சி தொடங்கி  சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்கிறார். அதற்கு அவரது கல்லூரி நண்பர்கள் பக்கபலமாக இருக்கின்றனர். இறுதியில் பல கட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, இளைஞர் படை தமிழ்நாட்டை ஆளத் தகுதி பெறுகிறது. சத்யமூர்த்தி(விக்ரம்) முதலமைச்சர் ஆகி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமாகப் பேசிவிட்டு வெளியில் வரும்போது படம் முடிகிறது.

இப்படத்தில் மாணவ இளைஞர்களை அரசியலை நோக்கி மடைமாற்றும் நபராக கொல்லப்படும் வித்யாவின் தந்தை டெல்லி கணேஷ் நடித்துள்ளார். அமைச்சராக எஸ்.எஸ். என்னும் கதாபாத்திரத்தில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்து இருக்கிறார்.

இப்படத்தில் முதல் பாதி கல்லூரியிலும், பின் பாதி சீரியஸ் மோடிலும் நகர்கிறது. இப்படத்தை இப்போது பார்த்தாலும் படத்தில் காட்டப்படும் லஞ்சமும் ஊழலும் சமகாலத்துக்கும் பொருந்திப்போகிறது.

படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்துள்ளார். படத்தில் எடுடா அந்த சூரியமேளம், வானில் ஏணி, நீ கட்டும் சேலை மடிப்பிலா நான் கசங்கி போனேண்டி, ஒன்னு ரெண்டு மூனு, வாடி சாத்துக்கொடி ஆகிய ஐந்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்தில் ஒன்னு ரெண்டு மூனுடா பாடலை காளிதாசன் எழுதியுள்ளார். இதர அனைத்துப் பாடல்களையும் பழனி பாரதி எழுதியுள்ளார். அதிலும் நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கி போனேண்டி என்னும் பாடல் இப்போதும் பலரின் பேவரைட் ரகமாக இருக்கிறது.

இப்படத்தின் யூகிக்கக்கூடிய திரைக்கதையால் இப்படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இப்படத்தின் விவேக் மற்றும் தாமு இணைந்து செய்த காமெடி ஒர்க் ஆகியது.

படம் வெளியாகி 29ஆண்டுகளை நிறைவு செய்தாலும் அரசியலில் புதிய மன்னர்கள் புரட்சிக்கான விதையாகவே இப்போதும் இருக்கிறது. அதனால் இப்படத்தை வெகுவாகப் பாராட்டலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி