தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள்

Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள்

Marimuthu M HT Tamil

Oct 02, 2024, 06:30 AM IST

google News
Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள் குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.
Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள் குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Mayilsamy: அன்றே திருப்பதி லட்டை வைத்து சம்பவம் செய்த மயில்சாமி.. மிமிக்ரி முதல் செய்த கொடை வரை மயில்சாமியின் செய்கைகள் குறித்து அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Mayilsamy: தமிழ் சினிமாவில் மற்றவருக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், மிகச் சிலரே. அந்த சிலரில் முக்கியமானவர் என்றால் நகைச்சுவை நடிகர் மயில்சாமியினை சொல்லலாம். அந்தளவுக்கு உதவி என்று கேட்டு வருபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்தும், பிறரிடம் பேசி பெற்றுத்தந்தும் உள்ளார். அடிப்படையில் எம்.ஜி.ஆர் ரசிகரான மயில்சாமி, அவரது கொடைத் தன்மையால் ஈர்க்கப்பட்டு, தானும் பலருக்கு உதவ வேண்டும் என தன் வாழ்நாள் இறுதிவரை அவ்வாறு வாழ்ந்தவர். அத்தகைய உன்னதக் கலைஞரான நடிகர் மயில்சாமியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த மயில்சாமி?:

நடிகர் மயில்சாமி அன்றைய பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் சத்தியமங்கலம் பகுதியில் 1965ஆம் ஆண்டு, இதே தேதியில்(அக்டோபர் 2) பிறந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 1977-ல் சென்னைக்கு வந்த அவர் நடிகர் பாக்யராஜிடம் தன் மிமிக்ரி திறமையைக் காட்டி, அவரது இயக்கத்தில் உருவான ’’தாவணிக் கனவுகள்’’ திரைப்படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.

அதன்பின் நடிகர் பிரபு, ரேவதி ஆகியோர் நடித்த கன்னி ராசி திரைப்படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடி செய்தார், நடிகர் மயில்சாமி.

இதனையடுத்து, ’’அபூர்வ சகோதரர்கள்’’ படத்தில் கமல் ஹாசனின் நண்பராகவும், வெற்றிவிழா திரைப்படத்தில் குஷ்பூவின் சகோதரராகவும், மைக்கேல் மதன காமராஜனில் தீயணைப்பு வீரராகவும் நடித்து மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகளைப் பெற்றார், நடிகர் மயில்சாமி.

குறிப்பாக, 2003ஆம் ஆண்டுவாக்கில் நடிகர் விவேக்குடன் மயில்சாமி இணைந்து நடித்து வெளிவந்த ’தூள்’ திரைப்படம், இவரது திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அப்படத்தில், நடிகர் விவேக்கை ஏமாற்றி பணத்தை பறிக்கும் சீன் தான் தரமானதாக இருக்கும். திருப்பதிக்குச் சென்று வருவதாக கூறுவார். அப்போது பார்சலில் லட்டுவிற்குப் பதிலாக ஜிலேபி இருக்க, அதை விவேக்கிடம் சமாளிப்பதற்காக “திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி தான் பாஸ் கொடுக்குறாங்கனு ” சொல்லி ஏமாற்றுவார். அந்த காமெடி இன்றைய காலத்து ஆந்திர அரசியலுக்கும் பொருந்திப்போகிறது. 

அதேபோல், ’’தவசி’’ படத்தில் போலி மாந்திரீகவாதியாக வந்து வடிவேலுவிடம் பணத்தைப் பறிக்கும் காட்சியிலும், ’’உன்னை நினைத்து’’ படத்தில் தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி சாப்பிட்டு, கருப்பாக மாறி அவர் பேசிய வசனம் என அதை இன்று நினைத்தால் கூட வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

பெயர் பெற்றுத்தந்த மயில்சாமியின் பணிகள்:

1987ஆம் ஆண்டு மயில்சாமியும் லட்சுமண் சுருதியின் லட்சுமணனும் சேர்ந்து வெளியிட்ட, ’’சிரிப்போ சிரிப்பு’’ எனும் மிமிக்ரி கேஸட், பட்டிதொட்டியெங்கும் மயில்சாமியின் பெயரைப் பெற்றுத்தந்தது. அதேபோல், 2003ஆம் ஆண்டு சன் டிவியில் ’’காமெடி டைம்’’ நிகழ்ச்சி மூலமாக இன்றைய 90’ஸ் கிட்ஸ் பலரையும் ஈர்த்து தமிழ்நாடு மூலம் பிரபலமானார். இதுதவிர பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து வெளிநாட்டு இசைக்கச்சேரி ஷோக்களில், அவ்வப்போது மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார், நடிகர் மயில்சாமி. அதுமட்டுமின்றி மிகப்பெரிய சிவத்தொண்டராகவும் இருந்த மயில்சாமி, தன் வாழ்நாளில் இறுதிமூச்சு இருக்கும் வரை சிவத்தொண்டராக கோயிலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள பலரின் மனதில் அவரது காமெடி காட்சிகள் மூலம் வாழ்ந்துவரும் மயில்சாமிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை