தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "அமரன் வெற்றிக்கு எனது வாழ்த்துகள்" - பாதுகாப்பு துறை அமைச்சருடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

"அமரன் வெற்றிக்கு எனது வாழ்த்துகள்" - பாதுகாப்பு துறை அமைச்சருடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

Nov 29, 2024, 07:58 PM IST

google News
அமரன் படம் பெற்றிருக்கும் வெற்றிக்கு சிவகார்த்தியேனிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அமரன் படம் பெற்றிருக்கும் வெற்றிக்கு சிவகார்த்தியேனிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அமரன் படம் பெற்றிருக்கும் வெற்றிக்கு சிவகார்த்தியேனிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியான படம் அமரன். போர்களத்தில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

படத்தில் மேஜர் முகந்த் வரதராஜனாக, சிவகாராத்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவியும் நடித்திருந்தார்கள். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

அமரன் படம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமரந் படக்குழுவினர்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் இன்று சந்திதுள்ளார்கள்.

இந்த சந்திப்பின்போது அமரன் படம் வெற்றி பெற்றதற்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் - ராஜ்நாத் சிங் சந்திப்பின் புகைப்படங்களை ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

இந்திய ராணுவ வீர்ரகளுக்கு அர்பணிக்கும் விதமாகவும், தேசத்துக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செல்த்தும் விதமாக இந்த படம் இருந்த நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சருடமான இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

"மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்கும் அமரன் குழுவினரின், இந்தச் சந்திப்பு தேசபக்தி உணர்வோடும், நம் தேசத்தின் மாவீரர்களுக்கான இதயப்பூர்வமான அஞ்சலியா செலுத்துவதையும் ஆழமாக எதிரொலிக்கிறது" என்று இந்த சந்திப்பின் புகைப்படங்களை பகிர்ந்து படத்தை தயாரித்திருக்கும் ராஜ்கமல் புரொடக்சன்ஸ் சார்பில் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ பயிற்சி மையத்தில் கெளரவம்

அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வரும் நிலையில், சென்னையில் இருக்கும் ஆபிசரஸ் ட்ரெயினிங் அகாடமி (ராணுவ பயிற்சி மையம்) சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மேஜர் முகுந்தனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அவரை போலவே திரையில் வாழ்ந்து காட்டிய சிவகார்த்திகேயனை பாராட்டி கெளரவித்துள்ளனர்.

அமரன் ஓடிடி ரிலீஸ்

அமரன் படம் வெளியாகி நான்கு வாரங்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை படம் ரூ. 320 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை பெற்ற படமாக அமரன் இருக்கிறது. அத்துடன் கோலிவுட் ஹீரோக்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரூ. 300 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அமரன் படம் தற்போது வரும் டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

இந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கும் 'அமரன்' படத்தின் வெற்றி விழாவை விரைவில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் படக்குழுவினருக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி