Gomathi Priya: ‘மிக அருகினில் இருந்து தூரமிது’ - கண்ணீர் வடித்த ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கோமதி! - வீடியோ!
Mar 04, 2024, 07:59 AM IST
‘சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.’ - கோமதி பிரியா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. முத்து - மீனா கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
300 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கோமதி பிரியா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அழுவது போன்ற வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வாமனன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன் அருகினில் இருந்தும் தூரமிது’ பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து, கண்ணீர் வடித்து அழுது கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இவர் கொடுத்த பேட்டியில், “ சினிமாவில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மாடலிங் வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினேன். ஆனால் இரண்டையும் என்னால் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை.
இதனையடுத்துதான் நான் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஆடிஷன் செல்லும் போது பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு நானே சோர்ந்து விடக்கூடாது பிரியா என்று சொல்லிக்கொள்வேன்.” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்