தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharini: “அப்பா, அம்மாவை மிஸ் செய்த யுவன் அழுத சம்பவம்..!” மேடையில் க்யூட்டாக சொன்ன பவதாரணி

Rip Bhavatharini: “அப்பா, அம்மாவை மிஸ் செய்த யுவன் அழுத சம்பவம்..!” மேடையில் க்யூட்டாக சொன்ன பவதாரணி

Jan 25, 2024, 09:52 PM IST

google News
தனது சகோதரன் யுவன் சிறு வயதில் செய்த க்யூட்டான விஷயத்தை மேடையில் வைத்து நினைவுபடுத்தி க்ளாப்ஸ்களை அள்ளினார் மறைந்த பாடகி பவதாரிணி. (Blacksheep Event)
தனது சகோதரன் யுவன் சிறு வயதில் செய்த க்யூட்டான விஷயத்தை மேடையில் வைத்து நினைவுபடுத்தி க்ளாப்ஸ்களை அள்ளினார் மறைந்த பாடகி பவதாரிணி.

தனது சகோதரன் யுவன் சிறு வயதில் செய்த க்யூட்டான விஷயத்தை மேடையில் வைத்து நினைவுபடுத்தி க்ளாப்ஸ்களை அள்ளினார் மறைந்த பாடகி பவதாரிணி.

சமீபத்தில் பிளாக் ஷீப் சேனல் சார்பில் யுவன் 25 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் யுவன் ஷங்கர் ராஜா தந்தையான இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, சகோதரி பவதாரணி உள்பட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது அனைவரும் ஒன்றாக மேடையேறி பார்வையாளர்கள் முன்னிலையில் க்யூ்டடாக சண்டை போட்டுக்கொண்டனர்.

இதன் விடியோவும் யூடியூப்பில் வைரலானது. அந்த நிகழ்வின்போது மேடையேறிய யுவன் ஷங்கர் ராஜா சகோதரர் கார்த்திக் ராஜா பேசும்போது, " மியூசிக் நாங்க எல்லோருமே ஜாலியாகத்தான் பன்ன ஆரம்பிச்சோம்" என்று சொல்ல அதற்கு இளையராஜா, " நான் மாட்டும்தான் சோலியா பன்னேன்" என கவுண்டர் கொடுக்க அரங்கமே கைதட்டலில் ஒலித்தது.

தொடர்ந்து பேசிய கார்த்திக் ராஜா, "அப்பாவுக்கு இசை தான் நாடி நரம்பு எல்லாமே. நாங்கள் அதை வைத்து பிஸ்னஸ் செய்கிறோம். அப்படித்தான் நாங்கள் கம்பேர் செய்து கொள்வோம்.

இசையையும் அப்பாவையும் பிரிக்க முடியாது. அவர் என்னைக்குமே ராஜாதான்" என்று பேசினார்.

அப்போது இளையராஜா நாங்களே நான்கு பேரும் முதல் முறையாக ஒரே மேடையில் இருப்பதாக கூற, யுவன் குறுக்கிட்டு எனக்கு முத்தம் கொடுத்ததும் இதுதான் முதல் முறை என்றார்.

இந்த கலகலப்பான தருணத்தில் பவதாரணியும் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். அப்போது அவர், "அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போயிருந்தார்கள். சின்ன பையனாக இருந்த யுவன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அப்போது பியானோ மீது கை வைத்து வாசித்தவாறே, டாடி மம்மி இப்போ எங்க போயிருக்காங்கன்னு சொல்லு. செல்லப்போறியா இல்லாட்டி நான் அழுகட்டா என பாடியதாக" க்யூட்டாக தெரிவித்தார்.

பவதாரணி தனது குடும்பத்தினருடன் கடைசியாக பங்கேற்ற பொது நிகழ்ச்சியாகவே இது உள்ளது. திடீரென இன்று இரவு அவரது இறப்பு செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி