தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne Serial: கை விரித்த அன்பு.. மகேஷ் கொடுத்த ஷாக் - சத்தியம் கேட்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne Serial: கை விரித்த அன்பு.. மகேஷ் கொடுத்த ஷாக் - சத்தியம் கேட்கும் ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil

Sep 19, 2024, 07:17 AM IST

google News
Singappenne Serial: அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என கேட்கிறார்.
Singappenne Serial: அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என கேட்கிறார்.

Singappenne Serial: அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என கேட்கிறார்.

Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( செப் 19 ) எபிசோட் அப்டேட் தொடர்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், “ ஆனந்தி நான் அவர்களின் சொந்த நிலத்தை எப்படியாவது மீட்டு கொடுத்துவிடுவேன் என்று என்னை நம்பினாள், ஆனந்தி. ஆனால் என்னால் முடியவில்லை. நான் அவளுக்கு சரியான நபர் இல்லை “ என்று அன்பு வழக்கம் போல் தனது நண்பரிடம் புலம்பி கொண்டு இருந்தார்.

மகேஷ் கொடுத்த ஷாக்

அந்த நேரம் பார்த்து காரில் எண்டரி கொடுத்த மகேஷ், “ எனக்கு எல்லா விஷயமும் தெரியமும் அன்பு. இதில் 10 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. நான் தான் கொடுத்தேன் என்று ஆனந்திக்கு தெரிய கூடாது. என்னுடைய காதல் விஷயத்தில் மற்றவர்களை விட உன்னை நான் ரொம்ப நம்புகிறேன் அன்பு “ என்று அதிர்ச்சி கொடுத்தார். வாங்கி கொள்ளலாமா? இல்லை அப்படியே சென்று விடலாமா? என்ற குழப்பத்தில் முழித்த படி நின்று கொண்டு இருக்கிறார் அன்பு.

தலை மேல் சத்தியம்

இறுதியாக சரி எப்படியோ பணம் கிடைத்துவிட்டு என மனம் மாறி மகேஷ் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு அன்பு, ஆனந்தியை பார்க்க தங்கும் விடுதிக்கு செல்கிறான். அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் “ என்று கேள்வி கேட்பதுடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது.

நேற்றைய எபிசோட்

நேற்றைய எபிசோட்டில் , அழகப்பன் தன்னுடைய நிலத்தை மீட்பதற்காக 10 லட்சம் வேண்டும் என்று ஆனந்தியிடம் கூறியிருந்தார். இதையடுத்து ஆனந்தி தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு உதவிக்குச் சென்றாள். ஆனால் எந்த இடத்திலும் அவளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அன்பும் ஆனந்தியும் வங்கி ஒன்றிற்கு பணம் கேட்பதற்காக சென்றிருந்தார்கள். அப்போது மகேஷ் போன் செய்து அங்கே லோன் வாங்குவதற்காக யாரேனும் வந்திருக்கிறார்களா என்று கேட்கிறான்.

இன்னொரு பக்கம் அழகப்பன் குடும்பத்திடம், உங்களை இந்த பணச் சிக்கலில் இருந்து நான் விடுவிக்க வேண்டும் என்றால், ஆனந்தியை எனக்கு கட்டி வையுங்கள் என்று கிடக்குப் பிடி போடுகிறான். இதைக் கேட்ட கோகிலா, அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறாள்.

இதற்கிடையே, ஆனந்தி தெருவில் வந்து கொண்டிருந்த பொழுது அண்ணன் வேலுவின் நண்பர், ஒருவரை துரத்திக்கொண்டு ஓடி வருவதை பார்க்க நேரிடுகிறது. அவர் கையில் ஒரு பையை வைத்திருந்தான். இதைப் பார்த்த ஆனந்தி, அவனிடம் சண்டை செய்து, பையை வாங்கி விடுகிறாள். இதற்கிடையே பின்னால் வேலு வந்து நிற்கிறான். ஆனந்தி, அன்பு பத்திரம் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்று உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி