ஆட்டையை கலைக்கும் அன்பு; மட்டையாவாரா மகேஷ்?.. அழகு ஆனந்தி யாருக்கு? சடுகுடு ஆடும் காதல்!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Oct 17, 2024, 08:29 AM IST
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி, அன்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதை அவர்கள் மகேஷிடம் கூற, அவன் அதிர்ச்சி அடைந்தான்
சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், அன்பும், ஆனந்தியும் தங்களுக்கு நேர்ந்த கொலை முயற்சியை மகேஷிடம் எடுத்துக்கூறினர். இதைக்கேட்ட மகேஷ் அதிர்ச்சி அடைந்தான். இன்னொரு பக்கம் அன்பு வேலையை விட்டு கிளம்ப முடிவு எடுத்து, ராஜினாமா கடிதத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவனது மனசாட்சி அவன் முன் தோன்றி, நீ இப்போது இழப்பது வேலை மட்டுமல்ல, ஒரு பெண்ணுடைய மனதுதான் என்று எச்சரிக்கிறது. மற்றொரு பக்கம், ஆனந்தி அன்புவை நான் வேலையை விட்டு செல்ல விட மாட்டேன் என்று சொல்ல, அவனது நண்பன், அது நடக்கவே நடக்காது என்ற ரீதியில் சவால் விடுகிறான். ” இவை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
நேற்று நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய தினம், அன்பு அம்மாவின் பார்வையில் மண்ணைத்தூவி, ஆனந்தியை போர்வையை வைத்து மறைத்து, ஒரு வழியாக அவனது வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தான். ஆனாலும் அவனது அம்மாவிற்கும், தங்கைக்கும் இவன் ஏன் திடீரென்று இப்படி நடந்து கொள்கிறான் என்ற சந்தேகம் வந்தது. இருப்பினும், அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இதற்கிடையே, கிச்சன் வழியாக வெளியே வந்து நின்று கொண்டிருந்த ஆனந்தியை, பைக்கில் ஏற்றி அன்பு போய்க்கொண்டிருந்த நிலையில், அவர்களை கொலை செய்வதற்கு முயற்சி நடந்தது. முதல்முறை அவர்கள் தப்பித்த நிலையில், மறுபடியும் அவர்களை கொல்ல முயற்சி நடந்தது. ஆனால், அந்த முறையும் அவர்கள் கடைசி நொடியில் தப்பித்து விட்டனர்.
மேல் கை வைத்த ஆனந்தி
இதையடுத்து யார் இப்படி நம்மை கொல்ல துடிப்பது என்ற சந்தேகத்தில் அன்பும் ஆனந்தியும் பதறி நிற்க, இந்த பதற்றத்தில், ஆனந்தி தன்மேல் கை வைத்ததை கவனிக்க மறந்து விட்டான் அன்பு. இதையடுத்து அவன் அவளை பார்த்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவே இல்லை.
இதற்கிடையே, மித்ரா மகேஷின் அம்மாவிடம் சென்று பேசிக் கொண்டிருக்க, மகேஷின் அம்மா மகேஷுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து தன்னை தான் அவர் அவருடைய மருமகளாக மாற்றுவார் என்று எதிர்பார்த்த மித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், பெண் வீட்டிலிருந்து மகேசை கேட்டு வந்தார்கள். நல்ல இடம் அந்த இடத்திற்கே நான் மகேசை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து கடுப்பான மித்ரா, நாங்கள் எல்லாம் எவ்வளவு பாடுபட்டாலும் உங்கள் கண்களுக்கு தெரிய மாட்டோம் அல்லவா? என்று மனதில் நினைத்துக் கொண்டாள். இதற்கிடையே, மகேஷின் அம்மா ஆனந்தியை மகேஷ் எங்கே வைத்திருக்கிறார் என்ற விஷயம் எனக்கு தெரிய வேண்டும் என்று சொல்ல, மித்ரா நான் அதை மகேஷிடம் லாவகமாக கேட்டுச் சொல்கிறேன் என்று கூறிச் சென்றாள். ஆனால், மகேஷ் அவளிடம் அந்த விஷயத்தை சொல்லவில்லை. நேரம் வரும் பொழுது அதை நான் உன்னிடம் சொல்கிறேன் என்று நழுவி கொண்டான்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்