ஹாஸ்டலில் இருந்து துரத்தப்பட்ட ஆனந்தி.. தன் வீட்டில் தங்க வைக்க முயற்சிக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
ஹாஸ்டலில் இருந்து துரத்தப்பட்ட ஆனந்தி.. தன் வீட்டில் தங்க வைக்க முயற்சிக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

தினமும் இரவு 9 மணிக்கு சன் டிவியில் சிங்கப்பெண்ணே ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், அக்டோபர் 11ஆம் தேதிக்கான புரோமோ வெளியாகியிருக்கிறது.
இன்றைய எபிசோட்:
சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோவில் கதையின் நாயகியான ஆனந்தி, தன்னுடன் ஹாஸ்டலில், தங்கியிருக்கும் காயத்திரியைக் காப்பாற்றுவதற்காக, விடுதியின் சுற்றுச்சுவரில் இருந்து ஹாஸ்டலுக்குள் குதிக்கிறார்.இதைப் பார்த்த ஹாஸ்டலின் வார்டன், ’’ஆனந்தியை வெளியில் அனுப்பச்செய்வதைத் தவிர, வேறு வழியில்லை’’ எனச்சொல்லி, வெளியில் அனுப்பிவிடுகிறாள். அதன்பின் ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு காரில் வந்து இறங்கும் மகேஷ், ஆனந்தியின் நிலையை அறிந்து அவளை அழைத்துக்கொண்டு, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மகேஷின் தாய் , ஆனந்தியை தன் வீட்டில் தங்க அனுமதிக்கமாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். பின் அவரை அழைத்துக்கொண்டு அன்புவின் வீட்டுக்குச் செல்லும் மகேஷ், ஆனந்தியை அன்புவின் வீட்டில் தங்க வைக்குமாறு கேட்கிறார். இதனால் சொல்வது அறியாமல் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், அன்பு.
அன்புவின் வீட்டில் தங்கப்போகும் ஆனந்தி:
மற்றொரு சிங்கப்பெண்ணே புரோமோவில், ஆனந்தியை தன் வீட்டில் தங்க வைக்க முயற்சி எடுக்கும் மகேஷை பார்த்து அவரது தாய், ‘ இவள் இந்த வீட்டில் தங்கினாள், நான் இந்த வீட்டில் தங்கமாட்டேன்’ என உறுதியாகச் சொல்கிறார். மேலும் தான் அழுது புலம்பியதற்கும் ஆனந்தி வெளியில் போனதற்கும் நீ தான் காரணம் என ஆனந்தியின் மேனேஜர் பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார். பரபரப்பான இந்தச் சூழலில் சிங்கப்பெண்ணே சீரியல் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
