Singapenne Serial: பணம் ரெடி.. ஆனா நிலத்தை மீட்க முடியுமா? - சண்டைக்கு தயாரான அன்பு - அதிர்ச்சியில் ஆனந்தி
Sep 21, 2024, 08:23 AM IST
Singapenne Serial: அன்பு, “ இந்த வழியில போன உங்க ஊருக்கு விரைவாக செல்ல முடியுமா? என்று கேட்க அவரும் உடனே போய்விடலாம் என சொல்கிறார்.
Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( செப் 21 ) எபிசோட் அப்டேட் தொடர்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது. எப்படியோ 10 லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு கிளம்பி வந்துவிட்டார்கள் ஆனந்தி மற்றும் அன்பு. ஊருக்குள் வருவதற்குள் அவர்களை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் சுயம்பு லிங்கம்.
தங்களை வழி மறித்து சண்டைக்கு வருபவர்களை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கி இருக்கிறார் அன்பு. ஆனந்தியிடம், அன்பு, “ இந்த வழியில போன உங்க ஊருக்கு விரைவாக செல்ல முடியுமா? என்று கேட்க அவரும் உடனே போய்விடலாம் என சொல்கிறார். சுயம்பு லிங்க திட்டத்தின் படி பணம் கிடைத்த விஷயம் அழகப்பன் மாமா குடும்பத்திற்கு தெரியாது என நினைத்து கொண்டு இருக்கிறார்.
பணம் கிடைத்துவிட்டது
ஆனால் அவர் நினைத்தது நடக்காமல் போனது. அழகப்பன் மாமாவிடம் சென்று சுயம்பு லிங்கம், பணம் தான் கிடைக்கவில்லையே, நேரத்தை தாமதம் செய்யாமல், பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிடுங்கள்” என சொல்கிறார். அவருக்கு ஆப்பு வைக்கும் அளவில், “ பணம் எல்லாம் கிடைத்துவிட்டது “ என கடுமையாக மொக்கை கொடுத்தார், அழகப்பன் மாமா.
யாரும் எதிர்பார்க்காத விதமாக காவலர்களே அவர்களுக்கு சொந்த நிலம் கிடைக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அன்பு பணத்தை எடுத்து கொண்டு வரும் போது, அவரை தடுக்க இரண்டு காவலர்கள் முயன்றனர். ஆனால் எப்படியாவது பணத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்ற எண்ணத்தில் இருக்கிறார் அன்பு. அவர்களிடம் நன்கு சண்டை போட்டு பணத்தை எடுத்து கொண்டு முயல்கிறார்.
அத்துடன் இன்றைய ( செப் 21 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது. முழுவதமாக என்ன நடக்கிறது என்பதை சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.
நேற்றைய எபிசோட்
சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய ( செப் 20 ) எபிசோட்டில், “ ஆனந்தி தங்கும் விடுதிக்கு சென்ற அன்பு, ஆனந்தியிடம் “ பணம் கிடைத்துவிட்டது. நாம் சென்று அப்பா, அம்மாவை பார்த்து பணத்தை கொடுத்துவிடலாம். நம் நிலத்தை மீட்டுவிடலாம்” என சொல்கிறார். எப்படி பணம் தயார் செய்து இருப்பார் என்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார் ஆனந்தி.
எப்படி இவ்வளவு பணம்
அதை அங்கு இருந்து பார்த்த மித்ரா, “ இவனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது. முதலில் இவனை எதாவதது செய்ய வேண்டும் “ என்று மனதிற்குள் திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்.
வழக்கம் போல் ஆனந்தியையும், அவரின் குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் சுயம்பு லிங்கம், “ ஆனந்தி, சிவரக்கோட்டை மண்ணில் கால் எடுத்து வைப்பதற்குள் , அழகப்பன் மாமாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டியது உன் கடமை “ என சொல்கிறார். மகேஷ் இடையில் போன் செய்து விசாரித்து கொண்டே இருக்கிறார். ஆனால் கடைசி வரை மகேஷ் தான் பணம் கொடுத்தார் என்று தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அன்புவிடம் சொல்லிவிட்டார்.
டாபிக்ஸ்