Singapennae Serial: அழகனை அழிக்க ராஜினாமா… அதிர்ச்சியில் ஆனந்தி.. கதறும் அன்பு! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Sep 30, 2024, 08:25 AM IST
Singapennae Serial: வேலையை விட்டு செல்வதற்கான காரணத்தை அன்புவின் நண்பன் அவனிடம் அதட்டி கேட்க, அன்பு மகேஷ் ஆனந்தியை காதலிக்கும் விஷயத்தை சொல்லி, அதற்காகத்தான் அங்கிருந்து கிளம்புவதாக கூறுகிறான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapennae Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், அன்பு வேலையை விட்டு செல்கிறேன் என்று கூறிய நிலையில், ஆனந்தி நான் உங்களிடம் அழகனைப் பற்றி அடிக்கடி கேட்பதால்தானே நீங்கள் வேலையை விட்டு செல்கிறீர்கள். நான் இனிமேல் உங்களிடம் அழகனை பற்றி கேட்கவே மாட்டேன் என்று உறுதி அளிக்கிறாள்.
ஆனாலும், அன்பு அதற்கு சமாதானம் ஆகவில்லை. இதற்கிடையே வேலையை விட்டு செல்வதற்கான காரணத்தை அன்புவின் நண்பன் அவனிடம் அதட்டி கேட்க, அன்பு மகேஷ் ஆனந்தியை காதலிக்கும் விஷயத்தை சொல்லி, அதற்காகத்தான் அங்கிருந்து கிளம்புவதாக கூறுகிறான். இது தொடர்பான காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில், வழக்கம்போல அன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த கருணாகரன், திடீரென்று அன்பு தான் இன்று எல்லோரையும் வேலை வாங்குவான் என்று சொல்லி விட்டு சென்றார். இதைப் பார்த்த அனைவரும் திடீரென்று கருணாகரன் இப்படியான ஒரு முடிவை எடுத்ததற்கு காரணம் என்ன என்று தெரியாமல் குழம்பி நின்றனர்.
கருணாகரன் சொன்னபடியே அன்பு அங்குள்ள வேலை ஆட்களிடம் வேலையைப் பிரித்துக் கொடுத்து, வேலை வாங்க ஆரம்பித்தான். மதியமும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கருணாகரன் அனைவரையும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று கூறிவிட்டு சென்றார். இதனால் அனைவரும் வழக்கம் போல ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். அப்போது, ஆனந்தியை தவிர்க்க வேண்டும் என்று நினைத்த அன்பு, தான் சாப்பிட வரவில்லை என்று கூற, அவனது நண்பன், என்னுடைய சாப்பாட்டில் உனக்கு நான் சாப்பாட்டை தருகிறேன். நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று வம்படியாக பிடித்து இழுத்து அங்கு வர வைத்தான்.
ஆனந்தியை தவிர்த்த அன்பு
அப்போது, அன்பு சாப்பாடு கொண்டு வரவில்லை என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு அனைவரும், அவனுக்கு தங்களது சாப்பாட்டில் இருந்து கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து ஊட்டி விட்டார்கள். அந்த வரிசையில் ஆனந்தியும் தன்னுடைய சாப்பாட்டில் இருந்து கொஞ்சம் சாப்பாட்டை அன்புக்கு ஊட்டி விட வந்த நிலையில், அன்பு அதனை மறுத்து, கையில் வாங்கிக் கொண்டான்.
இதைப் பார்த்த ஆனந்தி கடுமையாக மன உளைச்சலுக்கு உள்ளானாள். இந்த நிலையில் அன்பு, மகேஷை சென்று சந்தித்தான். அப்போது மகேஷ் அன்புவிடம், அப்பா அம்மாவை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன். ஆனால் ஆனந்தியின் மனதில் இருக்கும் அழகனை முதலில் அழிக்க வேண்டும். அப்போதுதான் ஆனந்தி என்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாள். அவள் ஏற்றுக் கொண்ட பின்னர் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை. நான் ஆனந்தியை நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, அன்பு அதற்கான வேலையை நான் பார்த்து விட்டேன் என்று சொல்லி கிளம்பினான். கருணாகரன் ரூமில் இருந்த பேப்பர்கள் திடீரென்று கீழே விழ, ஆனந்தியை அழைத்த அவர், அதனை சரிவர எடுத்து வைக்குமாறு கட்டளையிட்டார். அப்படி அவள் எடுத்து வைக்கும் பொழுது அன்பின் ராஜினாமா கடிதம் அதில் இருந்ததை அவள் பார்த்து விட்டாள். இதை அவள் மற்றவர்களிடம் வந்து கூறினாள். அத்தோடு நேற்றைய எபிசோட் முடிவடைந்தது
டாபிக்ஸ்