தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siddharth And Aditi: டம் டம் பாடலுக்கு ஜோடியாக நடனமாடிய சித்தார்த் - அதிதி

Siddharth and Aditi: டம் டம் பாடலுக்கு ஜோடியாக நடனமாடிய சித்தார்த் - அதிதி

Aarthi V HT Tamil

Feb 28, 2023, 02:39 PM IST

google News
சித்தார்த் - அதிதி ஜோடி நடன வீடியோ வைரலாகி வருகிறது.
சித்தார்த் - அதிதி ஜோடி நடன வீடியோ வைரலாகி வருகிறது.

சித்தார்த் - அதிதி ஜோடி நடன வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் அழகான புது ஜோடியாக சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமீப காலமாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த செய்திகள் வெறும் வதந்திகள் அல்ல. அவர்கள் தங்கள் உறவை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில், மதிய உணவுக்கு சென்ற ஜோடி கேமராவில் சிக்கினர். 

ஒரே காரில் இருந்து உணவகத்திற்கு வந்த சித்தார்த்தும் அதிதியும் மீடியாவில் சிக்கியுள்ளனர். சித்தார்த் கவனம் செலுத்தாமல் உள்ளே சென்ற போது அதிதி கேமராவிற்கு போஸ் கொடுத்தார். 

இந்நிலையில் அதிதியின் வீட்டில் இருவரும் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. எனிமி படத்தில் இடம் பெற்று இருக்கும், டும் டும் பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர்.

இந்த பாடலின் இசை தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சித்தார்த்துடன் அவர் ஆடிய இந்த நடன வீடியோவை அதிதி பகிர்ந்து உள்ளார்.

டான்ஸ் குரங்குகள்.. தி ரீல் டீல் என்ற தலைப்புடன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அதிதி பகிர்ந்துள்ளார். வீடியோ மிகவும் அருமையாக உள்ளது என்று பலரும் ஹார்ட் எமோஜியுடன் கருத்து தெரிவித்தனர்.

படங்களைப் பொறுத்தவரை, அதிதி ராவ் தற்போது நெட்ஃபிக்ஸ் தொடரான ​​ஹீரேமாண்டியில் நடித்து வருகிறார். இந்த தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். மறுபுறம், ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வரும் இந்தியன்-2 படத்திலும் சித்தார்த்துக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி