Siddharth Aditi: ‘உங்களுக்கு எப்ப கல்யாணம்’.. கேள்வி கணைகளை வீசும் நெட்டிசன்ஸ்!
Jan 27, 2023, 02:29 PM IST
நடிகை சித்தார்த், அதிதி ஆகிய இருவர் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது
பிரபல இயக்குநர் மணிரத்னத்திடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் நடிகர் சித்தார்த். இதனிடையே ஷங்கர் இயக்கிய ‘பாஸ்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து நடிகனாகவே பயணப்பட்ட அவர் தமிழ், தெலுங்கி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தார்.
முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த், கடந்த 2007 ஆம் ஆண்டு அவரை விவாரகத்து செய்தார்.அதனைத்தொடர்ந்து இவரும், நடிகை சமந்தாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்ற அவர்களின் வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையிதான் யாரும் எதிர்பார்க்க வண்ணம் நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து சித்தார்த், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிகையாக நடித்த அதிதிராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் சித்தார்த் கடந்த கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடிகை அதிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுடைய இதய இளவரசியே’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் பிரபலம் ஒன்றின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்ற சித்தார்த் அதிதியின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் சர்வானந்திற்கு ராக்ஷி ரெட்டிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தில்தான் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். இந்தப்புகைப்படத்தை பார்த்த சமூகவலைதளவாசிகள் ‘நீங்க எப்ப கல்யாணம் பண்ணீக்க போறீங்க’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்வானந்தின் வருங்கால மனைவி ரக்ஷிதா ரெட்டி சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளாவார். அது மட்டுமில்லாமல் ஆந்திர முன்னாள் அமைச்சர் போஜ்ஜலா கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தி ரக்ஷிதா ரெட்டி என்று கூறப்படுகிறது.
சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி பல வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
டாபிக்ஸ்