தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shanthi Williams: ‘66 வயசு கிழவிய கூட விட்டு வைக்க மாட்டானுங்க.. சாக்கடையை எடுத்து நம்ம மேலயே’ - சாந்தி!

Shanthi Williams: ‘66 வயசு கிழவிய கூட விட்டு வைக்க மாட்டானுங்க.. சாக்கடையை எடுத்து நம்ம மேலயே’ - சாந்தி!

Aug 29, 2024, 07:35 AM IST

google News
Shanthi Williams: அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். - சாந்தி!
Shanthi Williams: அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். - சாந்தி!

Shanthi Williams: அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். - சாந்தி!

Shanthi Williams: மலையாளம் திரையுலகில் ஹேமா அறிக்கை கலகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆகாயம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

66 வயது கிழவியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் 

இது குறித்து அவர் பேசும் போது, “மலையாள திரை உலகை பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை. காரணம் என்னவென்றால், மலையாள திரை உலகம் அரசியலால் நிறைந்தது. அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும்.  குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. நான் இத்தனை வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். 

நம்முடைய தமிழ் திரைத்துறையில் என்னை ஒருவர் கூட தவறான முறையில் அணுகியது கிடையாது. அதேபோலத்தான் ஆந்திர திரைத்துறையும், அவர்களும் மிகவும் கண்ணியமாக என்னிடம் நடந்து கொண்டார்கள். இங்கு உள்ளவர்கள் ஓரளவுக்கு உணர்வுகளை புரிந்தவர்கள். அதையும் மீறி சிலவை நடக்கிறது என்றால் அது வேறு. அதை நாம் குறை சொல்ல முடியாது. அதற்கு நாம் தடை விதிக்க முடியாது. காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. 

வேறு வழியில்லாமல் படுக்கைக்கு செல்கிறாள்

ஒரு கிராமத்திலிருந்து ஒரு நகரத்திற்குள் ஒரு பெண் வருகிறாள் அந்தப் பெண்ணினுடைய பின்னணி என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களை நம்பி எத்தனை உயிர்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? அத்தனை உயிர்களையும் காப்பாற்றுவதற்காகத்தானே அந்த பெண் துணிச்சலாக இப்படிப்பட்ட நகரத்திற்குள் வருகிறாள். அப்படி வரக்கூடிய அந்த பெண், இங்குள்ள ஆண்களின் காம இச்சைக்கு வேறு வழியில்லாமல், இந்த உலகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் இணங்குகிறாள். 

இன்று நிறைய நடிகைகள் அந்த நடிகர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார். இந்த நடிகர் என்னை அங்கு கூப்பிட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் கூப்பிட்டார்கள் என்றால், உங்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லலாம். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி விடுங்கள். 

ஆனால் உண்மையில் இப்படி சொல்லக்கூடியவர்கள்தான் தவறு செய்கிறார்கள். அப்படி சொன்னவர்கள் தற்போது திரைத்துறையில் இல்லாமல் போய் இருக்கிறார்கள். காரணம், இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை பொது வெளியில் கொண்டு வரும்பொழுது, உங்களை யாரும் வேலைக்கு கூப்பிட மாட்டார்கள். அதனால் குறை சொன்னவர்கள் வேலையில்லாமல் அவர்கள் மீண்டும் வறுமைக்குள் செல்ல வேண்டிய நிலைமை வரும். அவர்கள் வீடு கட்டி இருந்தால், அந்த வீடு அப்படியே பாதியில் நிற்கும். எங்காவது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் மட்டும் பணம் கிடைக்கும். 

ஆகையால் உங்களுக்கு திரைத்துறைக்குள் தவறாக ஒன்று நடக்கிறது என்றால், அந்த பிரச்சினையை அங்கேயே முடிக்க முயற்சி செய்யுங்கள். அதை வெளியே சொல்லக்கூடாது. அது நமக்கே நாமே சாக்கடையை எடுத்து, நம் மீது போட்டுக் கொள்வது போன்று மாறிவிடும். சிலர் அந்த இயக்குநர் என்னை அப்படி செய்து விட்டார். படப்பிடிப்பில் காரி துப்பிவிட்டார். அடித்துவிட்டார் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள். 

அதை பார்க்கும் இன்னொரு நடிகை என்ன நினைப்பார், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமக்கு தேவையில்லை என்றுதானே நினைப்பார் ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாது. இப்போது உள்ள காலமும் அப்படி மாறிவிட்டது. டெக்னாலஜியை பயன்படுத்தி தவறான விஷயத்தை கூட மிகத் தெளிவாக சரியான விஷயம் போன்று நம்மிடம் காண்பித்து விடுகிறார்கள்ஆகையால் ஒரு விஷயத்தை உண்மையா? பொய்யா என்று தெரியாமல் நாம் பேசவே கூடாது” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி