ரியலில் டேக் ஓகே செய்த பிரபலங்கள்
Feb 17, 2022, 06:57 PM IST
சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக இருந்து, ரியல் ஜோடிகளாக மாறிய பிரபலங்கள் பற்றி காண்போம்.
சின்னத்திரையில் நடிக்கும் சில ஜோடிகள் நிஜத்திலும் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என நம்மில் பலருக்கும் தோன்றி இருக்கும். அந்த வகையில் ரீல் ஜோடிகளாக இருந்து பின்பு, ரியல் ஜோடிகளாக மாறிய பிரபலங்கள் பற்றி காண்போம்.
ரச்சிதா - தினேஷ்
'பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் ரச்சிதா - தினேஷ் ஜோடி. இருவரும் காதலித்து வந்த நிலையில் ரச்சிதா வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணமானவுடன் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் ரச்சிதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அதனாலேயே தொடரில் மூன்று நடிகர்கள் மாறினாலும் அவரை மட்டும் மாற்றாமல் இருந்தார் இயக்குநர். பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘நாச்சியார் புரம்’ தொடரில் இணைந்து நடித்தனர்.
ஆல்யா மானசா - சஞ்சீவ்
'ராஜா ராணி' தொடரில் நடித்ததன் மூலம் பிறமலமானவர்கள் ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி. ஒன்றாக நடித்த போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து, திருமணம் செய்துக் கொண்டனர்.
இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆல்யா தற்போது ராஜா ராணி தொடரிலும், சஜ்சீவ் கயல் தொடரிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஜோடியான இவர்கள் நாள்தோறும் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் அவர்களது மகள் அய்லா செய்யும் செட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இவர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றாரோ அதே அளவிற்கு அவர்களது மகள் அய்லாவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
ரேஷ்மா - மதன்
’பூவே பூச்சூடவா’ சீரியலில் இணைந்து நடித்தவர்கள் ரேஷ்மா - மதன் ஜோடி. இவர்கள் இருவரும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
ஸ்ரேயா- சித்து
திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. திரையில் ரீல் ஜோடிகளாக வந்த இவர்கள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பிஸியாக இருவரும் தங்களது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
ஷபானா - ஆர்யன்
'செம்பரூத்தி' தொடர் அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. அதில் கிராமத்துப் பெண்ணாக வந்த ஷபானாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யலட்சுமி தொடரில் நடித்து வந்த ஆர்யானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஒரு மாதத்திலே இவர்கள் இருவரும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.