தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘சாக கிடந்தேன்.. அப்போ என் மார்பை பிடிச்சு சந்தோசப்பட்டாங்க’ நடிகை சந்தியா ஷாக் பேட்டி!

‘சாக கிடந்தேன்.. அப்போ என் மார்பை பிடிச்சு சந்தோசப்பட்டாங்க’ நடிகை சந்தியா ஷாக் பேட்டி!

Aug 21, 2023, 07:30 AM IST

google News
‘கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க?’ (sandhyajagarlamudi Instagram)
‘கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க?’

‘கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க?’

சந்திரலேகா உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வருபவரும், தெரு நாய்களை பாதுகாப்பதை பகுதி நேர பணியாக செய்து வரும் சந்தியா, பிரபல யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ:

‘‘எப்போதும் நாய்கள் நம்மை நோக்கி வந்தால், நாம் அதை விட டாமினேட் ஆனவன் என்பதைப் போல அதை எதிர்கொள்ள வேண்டும். இது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும். எனவே நாயை பார்த்ததும், பயந்து ஓடினால் அது அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும். 

2006ல் கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் எடுக்கும் போது, கோயில் யானை உடன் ஷூட் எடுத்தோம். அப்போது அது என்னை தாக்கியது. இதுவரை எனக்கு யானை மீது எந்த கோபமும் இல்லை. யானை தாக்கியதில், 7 இடங்களில் எனக்கு முறிவு ஏற்பட்டது. பாகங்களை அகற்ற நேர்ந்தது. 

காயத்தில் நான் மயங்கிவிட்டேன். பிழைத்ததே பெரிய விசயம். யானை கால் வைத்தது என்று நினைத்தேன், ஆனால் அது தும்பிக்கையில் தான் என்னை நசுக்கியது. அதுவே என்னால் தாங்க முடியவில்லை. காயத்தில் என்னை எல்லாரும் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அனைவரும் டான்ஸர்கள். 

அந்த தயாரிப்பாளர் இப்போ இல்லை, இறந்துவிட்டார். அதனால் அவர்கள் என்னை நன்றாக கவனித்தார்களா? இல்லையா? என்பதைப் பற்றி பேச வேண்டாம். ஆனால் என்னை ஆண் டான்ஸார்கள் என்னை தூக்கிச் செல்லும் போது, அதில் ஒரு டான்ஸர், என் மார்பில் கை வைத்து இன்பம் பெற்றுக் கொண்டிருந்தார். 

என் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்றால், அதை தான் நான் சொல்வேன். கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி தான் இருந்தேன். பிணத்தை கூடவா இப்படி செய்வாங்க? என்னை தூக்கிச் செல்லும் போது, என் மார்பில் கை வைத்த அந்த டான்ஸர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன். என் அம்மாவிடம் கூட அதை சொல்லவில்லை என்று நினைக்கிறேன். 

என் நிலையை பார்த்தே என் அம்மா உடைந்து போயிருந்தார். அவரிடம் இதை எப்படி கூறுவது? எங்களுக்கு அப்போ தமிழ் கூட தெரியாது. கும்பகோணத்தில் ரொம்பவே தவித்து போனார்கள். அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாள் ஆச்சு.

அப்புறம் கொஞ்சம் நாள் கழித்து, ‘நான் மாதவிடாய் காலத்தில் இருந்ததாகவும், அதனால் யானை என்னை மிதித்து விட்டதாகவும்’ பேசியது என் காதிற்கு வந்தது. எதை நினைத்து கஷ்டப்படுவது என்றே தெரியவில்லை. ஐதராபாத்தில் இருந்தேன், அப்போ குற்றம் நடந்தது என்ன நிகழ்ச்சியில் என்னுடைய டாஃபிக் போனது. அதில் நிபுணர்கள் பலர் சொன்னார்கள், ‘அவர் அணிந்திருந்த ஆடையின் நிறம் பிடிக்காமல் போயிருக்கலாம், வாசனை திரவியம் பிடிக்காமல் போயிருக்கலாம்’ என்றெல்லாம் பேசினார்கள். பாதிக்கப்பட்ட என்னிடம் கேட்டிருக்கலாமே.

நான் மாதவிடாயில் இருந்ததை யார் தூக்கிப் பார்த்தது? எதை வைத்து இப்படி பேசுகிறார்கள்? நான் சொன்னால் தானே அது உண்மை. யார் அப்போ, யாரை காப்பாற்ற அந்த நிகழ்ச்சியை போடச் சொன்னார்கள் என்று கூட எனக்கு தெரியாது. 

2019ல் மீண்டும் அந்த கோயிலுக்கு சென்று யானையை பார்க்கச் சென்றேன். தூரத்தில் நின்று பார்த்தேன். ஏன் அந்த யானை தாக்கியது என்கிற காரணத்தை கூறுகிறேன். அந்த யானை வரும் போது, நான் காசு கொடுக்க வேண்டும், அப்போது யானை ஆசிர்வாதம் செய்யும். மறுபடி டேக் எடுக்கிறார்கள். அது ஷூட்டிங் யானை கிடையாது, கோயில் யானை. டேக் எடுக்கும் போது, முன்பு கொடுத்த அதை ரூபாயை எடுத்து மீண்டும் யானைக்கு கொடுக்கச் சொன்னார்கள். 

எனக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால், அதற்கு யானை இப்படி ரியாக்ட் பண்ணும் என தெரியாது. மூன்றாவது டேக் எடுக்கும் போதும் மீண்டும் அதே நோட்டை கொடுத்தார்கள். யானைக்கு கோபம் வந்துவிட்டது. இவள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்துவிட்டது. அதனால் தான் அது என்னை தாக்கியது. 

இதை என்னிடம் கேட்டிருக்கலாமே? இதை கேட்காமலேயே விவாதமாக்கினார்கள். என்னுடைய அப்பா கூட ஜெனர்லிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜெனர்லிஸம் நடந்தது,’’

என்று அந்த பேட்டியில் சந்தியா வேதனையுடன் தெரிவித்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி