தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aparna Nair: சீரியல் நடிகை தற்கொலை; அதிர்ச்சியில் சக நடிகர்கள்

Aparna Nair: சீரியல் நடிகை தற்கொலை; அதிர்ச்சியில் சக நடிகர்கள்

Marimuthu M HT Tamil

Sep 01, 2023, 05:24 PM IST

google News
மலையாள சீரியல் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 33.
மலையாள சீரியல் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 33.

மலையாள சீரியல் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 33.

மலையாள சினிமா - சீரியல்களில் நடிகையாக வலம்வந்தவர், அபர்ணா நாயர். இவர் மேகதீர்த்தம், அச்சாயன்ஸ், கல்கி, முத்துகெளவ் ஆகியப் படங்களில் நடித்திருந்தார். ஆத்மசகி, மைதிலி மீண்டும் வருன்னு உள்ளிட்ட டி.வி. சீரியல்களிலும் நடித்திருந்தார்.

33 வயதான அபர்ணா நாயர், திருவனந்தபுரத்தில் உள்ள கரமனாவில் தனது கணவர் சஞ்சித்துடனும், த்ரியா மற்றும் கிருத்திகா ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் அபர்ணாவின் தாயார் அங்கு வந்திருந்தபோது, அவரது வீட்டின் அறை மூடப்பட்டு இருப்பதை அறிந்து, கதவைத் தட்டி திறந்தபோது, தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அபர்ணா நாயரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் முன்னரே இறந்துள்ளார்.

இது ஒரு இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அபர்ணா நாயர் குடும்பப் பிரச்னை காரணமாகவும், அது தந்த எக்ஸ்டிரீம் மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் எனவும்; அது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்த கேரள திரையுலகமும் சின்னத்திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அபர்ணாவுடன் நடித்த நடிகர், நடிகைகள் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர். 

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: தற்கொலை எண்ணம் வந்தால் 104-என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசுங்கள். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 உதவிசேவை எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி