தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: சீதாவுக்கு பைத்தியக்காரி பட்டம்‌‌.. நடக்க போவது என்ன?

Seetha Raman: சீதாவுக்கு பைத்தியக்காரி பட்டம்‌‌.. நடக்க போவது என்ன?

Aarthi V HT Tamil

Apr 03, 2023, 07:23 PM IST

google News
சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரிசப்ஷன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க மகாலட்சுமி வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து மதுமிதா தான் ராமின் மனைவி, சீதா காதல் தோல்வியால் பைத்தியமாகி விட்டதாகவும் அதனால் தான் இருவரும் ஒரே மாதிரி டிரெஸ் போட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்ல வேண்டும் என கண்டிஷன் போடுகிறாள்.

அடுத்து துரை மகாலட்சுமியின் திட்டத்தை வெளியே கொண்டு வந்து எப்படியாவது இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டும் என நினைத்து சரக்கு அடித்து விட்டு ராஜசேகரிடம் பேச முயற்சி செய்கிறான். அந்த இடத்தில் சீதாவும் இருக்க அவர் போதையில் இருக்கிறார் என ராஜசேகரை அழைத்து சென்று விடுகிறாள்‌.

இந்த நேரத்தில் துரை ராஜசேகரிடம் உண்மையை சொல்ல போனதை கவனித்த அர்ச்சனா துரையை மிரட்டுகிறாள். அடுத்து ராஜசேகர் மதுவை பார்க்கும் போதெல்லாம் கோபப்பட்டு வரும் நிலையில் உமா சீதா மற்றும் மதுமிதாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபப்பட்டு அங்கே செல்ல அங்கும் வரும் துரை உண்மையை சொல்ல போக சேது தடுத்து விடுகிறான்.

அதனைத்தொடர்ந்து ராஜசேகர் மதுமிதாவை திட்டுவதற்காக ரூமுக்குள் வர அங்கு அவள் இல்லாமல் இருக்கிறாள். சீதா மற்றும் உமா மட்டுமே இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி