HBD Satyajit Ray: யதார்த்த சினிமாவின் பிதாமகன் சத்யஜித் ரே!
May 02, 2023, 06:10 AM IST
Satyajit Ray: பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்கள் இவர் இயக்கிய திரைப்படங்களில் உலகப் புகழ்பெற்றவை ஆகும்.
சத்யஜித் ரே. மேற்கு வங்கத்தில் பிறந்தவர். வங்க மொழியில் படம் எடுத்தவர். இதனால், இவர் வங்கத்துக்கு மட்டுமே சொந்தம் என கூறிவிட முடியாது.
இவர் சினிமாவுக்கு சொந்தம். யதார்த்த சினிமாவின் பிதாமகன் சத்யஜித் ரே. இவரது படங்கள் சினிமா குறித்து படிப்பவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இவரது திரைமொழி அலாதியானது. இவர் மிகச் சிறப்பாக திரைமொழியை கையாள்வார். ஒரு திரைப்படத்திற்கு திரை மொழி மட்டுமே பிரதானம் என்பதை திரைப்படத்தை மிகவும் நேசிப்பவர்களும், ஆகச் சிறந்த திரைப் படைப்பாளிகளும் மறுக்க மாட்டார்கள்.
உலகப் புகழ்பெற்ற திரை மேதை என கொண்டாடப்படுபவர் சத்யஜித் ரே. இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மையைக் கொண்டவர் சத்யஜித் ரே.
திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உள்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார்.
பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய திரைப்படங்கள் இவர் இயக்கிய திரைப்படங்களில் உலகப் புகழ்பெற்றவை ஆகும்.
1992இல் திரைப்பட பணிக்காக ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதே ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
தந்தை சுகுமார் ராய் விமர்சகர், விரிவுரையாளர், வங்காள மொழி எழுத்தாளர், நிறைய சிறுவர் இலக்கியத்தை இயற்றியவர்.
சத்யஜித் ரே கொல்கத்தாவில் சுகுமாருக்கும் சுபத்திராவுக்கும் பிறந்தவர். இவரது பிறந்த தினம் மே 2. பிறந்த ஆண்டு 1921. ராய் மூன்று வயது இருக்கும் போதே சுகுமார் இறந்துவிட்டார். சுபத்திராவின் வருமானத்திலேயே ராயின் குடும்பம் வளர்ந்தது.
கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இருந்தாலும் அவரின் விருப்பம் கலைகள் மீதே இருந்தது.
1992ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தனது 70வது வயதில் காலமானார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்