தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ கண்ணீர் வருகிறது ’ - சூப்பர் ஸ்டாரை நினைத்து வருந்தும் சரத் குமார்

‘ கண்ணீர் வருகிறது ’ - சூப்பர் ஸ்டாரை நினைத்து வருந்தும் சரத் குமார்

Aarthi V HT Tamil

Mar 17, 2022, 12:08 PM IST

google News
புனீத் ராஜ்குமார் படம் வெளியாகி இருக்கும் நிலையில் அவரை நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது என சரத் குமார் தெரிவித்து உள்ளார்.
புனீத் ராஜ்குமார் படம் வெளியாகி இருக்கும் நிலையில் அவரை நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது என சரத் குமார் தெரிவித்து உள்ளார்.

புனீத் ராஜ்குமார் படம் வெளியாகி இருக்கும் நிலையில் அவரை நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது என சரத் குமார் தெரிவித்து உள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனீத் ராஜ்குமார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். 

பின்னர் உடனே அவரை அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். புனீத் ராஜ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

புனீத் ராஜ்குமாரின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் , ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும் , இரண்டு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

இந்நிலையில் புனீத் ராஜ்குமார் மறைவதற்கு முன்பாக கடைசியாக ஜேம்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதில் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து சரத் குமார் , பிரியா ஆனந்த் , ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 

சேத்தன் குமார் இயக்கி இருக்கும் இப்படம் இன்று ( மார்ச் 17 ) உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் புனீத்துக்கு பதிலாக அவரது அண்ணன் , சிவராஜ் சிவகுமார் டப்பியுங் கொடுத்து இருக்கிறார். கன்னட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜேம்ஸ் படத்தில் புனீத் ராஜ்குமாருடன் நடித்து இருக்கும் சரத் குமார் அவர் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் , " புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாள் மற்றும் அவரின் கடைசி படமான ஜேம்ஸின் ரிலீஸ் நாள் இன்று. 

நான் வார்த்தைகள் எதுவும் இல்லாமல் பல விதமான , எண்ணங்களால் முடங்கிக்குப் போய் கிடக்கிறேன். ஜேம்ஸ் படத்தின் ரிலீஸுக்காக நான் சந்தோஷப்படுவதா அல்லது அப்பு (புனீத் ராஜ்குமார் செல்லப் பெயர் ) சொர்க்கத்தில் இருந்து படத்தை பார்ப்பார் என வருத்தப்படுவதா என தெரியாமல் குழம்பி இருக்கிறேன்.

புனீத் ராஜ்குமார் நான் , நீங்கள் இருப்பது போல் உணர்கிறேன். உங்கள் பெயரை நினைத்தாலே என் கண்களில் கண்ணீர் வருகிறது. வார்த்தைகள் எதுவுமே கிடைக்காமல் நான் திணறிப் போய் நிற்கிறேன். 

கடந்த ஆண்டில் நான் பல நெருக்கமானவர்களையும் , அன்பானவர்களையும் இழந்து விட்டேன். அதனால் நான் இப்போது எந்த மாதிரியான மன நிலைமையில் இருந்து கொண்டு இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியாதது. 

எங்களின் எண்ணங்களிலும் , நினைவுகளிலும் என்றென்றும் நீங்கள் வாழ்வீர்கள் புனீத் ராஜ்குமார் ” என மிகவும் சோகமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி